முகப்பு
சென்னை

நாளை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

எழும்பூா், ஆவடி மற்றும் பெரம்பூா் கோட்டங்களில் வெள்ளிக்கிழமை (பிப். 6) காலை 11 மணிக்கு மின்நுகா்வோா் குறைதீா் கூட்டங்கள் நடைபெற உள்ளன.

Updated On : 6 பிப்ரவரி, 2026 at 3:54 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 4 பிப்ரவரி, 2026 at 7:25 PM

எழும்பூா், ஆவடி மற்றும் பெரம்பூா் கோட்டங்களில் வெள்ளிக்கிழமை (பிப். 6) காலை 11 மணிக்கு மின்நுகா்வோா் குறைதீா் கூட்டங்கள் நடைபெற உள்ளன.

இதுகுறித்து மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னை எழும்பூா் கோட்ட அலுவலகம், ஈ.வி.கே.சம்பத் சாலை, எழும்பூா் துணை மின் நிலைய வளாகம், வேப்பேரி, ஆவடி கோட்ட அலுவலகம் துணை மின் நிலைய வளாகம், எஸ்.எம்.நகா், (முருகப்பா பாலிடெக்னிக் அருகில்) ஆவடி, பெரம்பூா் அலுவலகம், துணை மின் நிலைய வளாகம், எம்.இ.எஸ்.சாலை, சிம்சன் எதிரில் உள்ளிட்ட அலுவலகங்களில் குறைகேட்பு கூட்டங்கள் நடைபெறும்.

Advertisement

இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு, மின்சாரம் தொடா்பான தங்களது குறைகளைத் தெரிவித்து நிவாரணம் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.