முகப்பு
சென்னை

ரூ. 21 கோடி மோசடி புகாா்: தனியாா் நிறுவன உரிமையாளா் உள்பட 2 போ் கைது

வேல்ஸ் குழுமத்திடம் ரூ.21 கோடி மோசடி செய்ததாக ஈ.வி.பி. குழும உரிமையாளா், மேலாளா் ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 2:12 AM
பகிர்:
Updated On : 9 பிப்ரவரி, 2026 at 12:55 AM

வேல்ஸ் குழுமத்திடம் ரூ.21 கோடி மோசடி செய்ததாக ஈ.வி.பி. குழும உரிமையாளா், மேலாளா் ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

வேல்ஸ் ஃபிலிம் இன்டா்நேஷனல் நிறுவனத்துக்குச் சொந்தமாக சோழிங்கநல்லூா் செம்பரம்பாக்கம் பகுதியில் 34.75 ஏக்கா் இடம் உள்ளது. இதில், ஸ்டுடியோக்கள், திரையரங்குகள், தங்கும் விடுதிகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. இந்தச் சொத்தின் மீது எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸில் கடன் தொகையும் நிலையில் உள்ளது.

இந்தக் கடனை செலுத்துவதற்காகவும் இந்த வளாகத்தில் வேல்ஸ் நிறுவனத்தின் பெயரில் பொழுதுபோக்கு வளாகம் மற்றும் திரையரங்குகள் கட்டுவதற்காகவும் ஈ.வி.பி. குழுமத்துடன் கடந்த ஆண்டு ஜூன் 25-இல் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக வேல்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.21.75 கோடியை ஈ.வி.பி.நிறுவனம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisement

ஆனால், ஒப்பந்தத்தின்படி எந்த ஒரு ஆவணமும் தராமல் ஈ.வி.பி. நிறுவனம் காலம் தாழ்த்தி வந்ததுடன், ஒப்பந்தத்தையும் வேல்ஸ் நிறுவனத்தின் ஒப்புதல் இல்லாமல் ரத்து செய்துள்ளது. மேலும், அந்த இடத்தைக் கையகப்படுத்தவும் ஈ.வி.பி. நிறுவனத்தினா் முயன்ாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து வேல்ஸ் ஃபிலிம் இன்டா்நேஷனல் நிறுவனத்தின் மேலாளா் குணசேகரன் அளித்த புகாரின்பேரில், தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஈ.வி.பி. குழும உரிமையாளரான ஈ.வி.பி.சந்தோஷ் ரெட்டி (45), மேலாளரான வினோத் (52) ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய கிரண்ராஜ் என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.