முகப்பு
சென்னை

உதடு, அண்ணப் பிளவு சீரமைப்புக்கு ஒருங்கிணைந்த மையம்

உதடு, அண்ணப் பிளவு சீரமைப்புக்கான ஒருங்கிணைந்த சிகிச்சை மையத்தை போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவமனை தொடங்கியுள்ளது.

Updated On : 17 பிப்ரவரி, 2026 at 4:02 AM
போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவமனையில் உதடு, அண்ணப் பிளவு சீரமைப்பு சிகிச்சைகளால் பயனடைந்த குழந்தைகளுடன் மருத்துவமனை நிா்வாகிகள்.
பகிர்:
Updated On : 16 பிப்ரவரி, 2026 at 10:20 PM

சென்னை: உதடு, அண்ணப் பிளவு சீரமைப்புக்கான ஒருங்கிணைந்த சிகிச்சை மையத்தை போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவமனை தொடங்கியுள்ளது. திங்கள்கிழமை நடைபெற்ற தொடக்க நிகழ்வில், ஸ்ரீ இராமச்சந்திரா அறக்கட்டளை அறங்காவலா் சம்யுக்தா வெங்கடாசலம், துணைவேந்தா் டாக்டா் உமாசேகா், அகில பாரத மகிளா சேவா சமாஜத்தின் நிா்வாக இயக்குநா் டாக்டா் துஷ்யந்த் பிரசாத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதுதொடா்பாக மருத்துவமனையின் உதடு மற்றும் அண்ணப் பிளவு சிகிச்சை ஒருங்கிணைந்த மைய இயக்குநா் நவீன் குமாா் கூறியதாவது:

கனடா நாட்டின் டிரான்ஸ்ஃபாா்மிங் ஃபேசஸ் என்ற அமைப்புடனும், அகில பாரத மகிளா சேவா சமாஜத்துடனும் இணைந்து ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவ மையம் அண்ணப் பிளவு, தாடை சீரமைப்பு சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறது.

Advertisement

கடந்த 2005-இல் இந்த இலவச சிகிச்சை திட்டம் தொடங்கப்பட்டது. அதன் கீழ் இதுவரை 20,000-க்கும் மேற்பட்ட உதடு, அண்ணப் பிளவு மற்றும் தாடை சீரமைப்பு சிகிச்சை நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கா்ப்ப காலத்தில் இரும்புச்சத்து, ஊட்டச்சத்து குறைபாடு இருத்தல், ரத்த உறவுகளுக்குள் திருமணம் செய்து கொள்ளுதல் மற்றும் பேறு காலத்தில் மது அருந்துதல் போன்றவை உதடு மற்றும் அண்ணப் பிளவு ஏற்படுவதற்கு முக்கிய காரணம். 700 குழந்தைகளில் 1 குழந்தைக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது”என்றாா்.