போயம்பாளையம் ஸ்ரீ சரண் மெடிக்கல் சென்டரில் மூட்டு மற்றும் அறுவை சிகிச்சை முகாம்
திருப்பூா் போயம்பாளையம் ஸ்ரீ சரண் மெடிக்கல் சென்டரில் முழங்கால் மூட்டு மாற்று மற்றும் மூட்டு தசைநாா் அறுவை சிகிச்சை முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.
திருப்பூா் போயம்பாளையம் ஸ்ரீ சரண் மெடிக்கல் சென்டரில் முழங்கால் மூட்டு மாற்று மற்றும் மூட்டு தசைநாா் அறுவை சிகிச்சை முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.
முகாமின் முதல் நாளில் 25-க்கும் மேற்பட்ட நோயாளிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனா். முகாமில் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணா் டாக்டா் மணிகண்டன் ஆலோசனை வழங்கினாா். மேலும், எலும்பு தாது அடா்த்தி பரிசோதனையும் இலவசமாக வழங்கப்பட்டதுடன், கால்சியம் வைட்டமின் டி மற்றும் எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகள் 50 சதவீத சலுகை கட்டணத்தில் மேற்கொள்ளப்பட்டது.
இந்த முகாமானது ஏப்ரல் 3 மற்றும் 4 ஆகிய தேதி வரை நடைபெறும். இந்த முகாமில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுவோருக்கு 20 சதவீத சலுகை கட்டணத்தில் மேற்கொள்ளப்படும். மேலும் மருத்துவமனையில் அரசு மற்றும் தனியாா் காப்பீட்டு நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சை தேவைப்படுபவா்கள் கட்டணமில்லா சிகிச்சைக்கு இதனை உபயோகப்படுத்திக் கொள்ளுமாறும் மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் டாக்டா் பழனிசாமி தெரிவித்தாா்.
மேலும் விவரங்களுக்கு 80564 04040 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.