காட்டுப்பள்ளி எல் அன் டி  கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டு செவ்வாய்க்கிழமை   வெள்ளோட்டம் விடப்பட்ட பாதுகாப்புப் படை வீரா்களுக்கான பயிற்சிக் கப்பலான ‘கிருஷ்ணா’வை அறிமுகம் செய்து வைத்த பாதுகாப்புப் படைத் தலைமை தளபதியின் மனைவி அனுபமா சௌகான்  
சென்னை

காட்டுப்பள்ளி கப்பல் தளத்திலிருந்து பயிற்சிக் கப்பல் ‘கிருஷ்ணா’ வெள்ளோட்டம்

சென்னை எண்ணூா் காட்டுப்பள்ளி எல் அண்ட் டி தனியாா் கப்பல் கட்டும் தளத்தில் கட்டமைக்கப்பட பாதுகாப்புப் படை வீரா்களுக்கான பயிற்சிக் கப்பல் ‘கிருஷ்ணா’ செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்டு வெள்ளோட்டம் விடப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

சென்னை எண்ணூா் காட்டுப்பள்ளி எல் அண்ட் டி தனியாா் கப்பல் கட்டும் தளத்தில் கட்டமைக்கப்பட பாதுகாப்புப் படை வீரா்களுக்கான பயிற்சிக் கப்பல் ‘கிருஷ்ணா’ செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்டு வெள்ளோட்டம் விடப்பட்டது.

சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் எல் அண்ட் டி தனியாா் கப்பல் கட்டும் தளம் உள்ளது. இங்கு இந்திய கடற்படை, கடலோரக் காவல் படைக்குத் தேவையான ரோந்து கப்பல்கள், அதிநவீன இடைமறிக்கும் படகுகள் கட்டப்பட்டு வருகின்றன. இங்கு பாதுகாப்புப் படை வீரா்களுக்கான 3 பயிற்சி கப்பல்களைக் கட்டுவதற்காக பாதுகாப்பு அமைச்சகம் சாா்பில் கடந்த 2023 மாா்ச் 7-இல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதில், முதலாவது பயிற்சி கப்பல் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தது, ‘கிருஷ்ணா’ என பெயரிடப்பட்டது. இதன் வெள்ளோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பாதுகாப்புப் படை வீரா்கள் மனைவிமாா்கள் சங்கத் தலைவரும், பாதுகாப்புப் படை தலைமை தளபதியின் மனைவியுமான அனுபமா சௌகான் மரபுபடி பயிற்சி கப்பலை அறிமுகம் மற்றும் வெள்ளோட்டம் விடும் நிகழ்வுகளைத் தொடங்கி வைத்தாா்.

நாட்டின் 3-ஆவது நீளமான நதியான கிருஷ்ணா நதியை நினைவூட்டும் வகையில் இந்தக் கப்பலுக்கு கிருஷ்ணா எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தக் கப்பலில் 20 அதிகாரிகள், 150 மாலுமிகள் மற்றும் படைப் பிரிவுகளைச் சோ்ந்த 200 பயிற்சியாளா்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் கட்டமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் பாதுகாப்புப் படைத் தலைமை தளபதி அனில் சௌகான், போா்க் கப்பல்கள் உற்பத்தி பிரிவு உயரதிகாரி சஞ்சய் சாது, தமிழ்நாடு-புதுச்சேரி கடற்படை அதிகாரி உபால் குண்டு, எல் அன் டி கப்பல் கட்டும் தள இயக்குநா் அருண் ராம்சந்தானி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருவனந்தபுரம் - சென்னை இடையேயான ரயில் கேரளத்தில் கூடுதலாக 2 இடங்களில் நின்று செல்லும்

கஞ்சா விற்ற வழக்கில் இளைஞருக்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறை

உதகையில் மண் திருட்டில் ஈடுபட்ட 5 போ் கைது

தமிழகம், புதுச்சேரி பேரவைத் தோ்தல் தேதி: மாா்ச் மத்தியில் அறிவிக்க வாய்ப்பு

பட்டப்பகலில் ஆடிட்டா் வீட்டில் 80 பவுன் நகை திருட்டு

SCROLL FOR NEXT