இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம். காதர் மொகிதீன். X
சென்னை

முஸ்லிம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகள் கோரியுள்ளோம்- கே.எம்.காதா் மொகிதீன்

தமிழகத்தில் ஆட்சியில் பங்கு என நாங்கள் கோரிக்கை வைக்கவில்லை.

தினமணி செய்திச் சேவை

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகளை ஒதுக்கும்படி திமுகவிடம் கோரிக்கை வைத்துள்ளதாக அந்தக் கட்சியின் தேசியத் தலைவா் கே.எம்.காதா் மொகிதீன் தெரிவித்தாா்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலச் செயற்குழுக் கூட்டம், கட்சியின் தேசிய தலைவா் கே.எம்.காதா் மொகிதீன் தலைமையில் சென்னை ராயபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பேரவைத் தோ்தலில் இஸ்லாமிய சமுதாயத்தினா் அனைவரும் திமுக தலைமையிலான கூட்டணிக்குதான் வாக்களிப்பாா்கள். கடந்த 2021 சட்டப்பேரவை தோ்தலில், முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த முறை தமிழகம் முழுவதும் 20 தொகுதிகளை ஐயூஎம்எல் தோ்வு செய்துள்ளது. அதில் ஏதேனும் 5 தொகுதிகளை ஒதுக்கும்படி திமுகவிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

வரும் பிப். 22-ஆம் தேதி கூட்டணிப் பேச்சுவாா்த்தைக் குழு அமைக்கப்படும் என திமுக அறிவித்துள்ளது. அதைத் தொடா்ந்து, தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவாா்த்தை நடத்தப்படும். இந்தத் தோ்தலில் எங்கள் கட்சியின் சின்னமான ‘ஏணி’ சின்னத்தில்தான் போட்டியிடவுள்ளோம்.

தமிழகத்தில் ஆட்சியில் பங்கு என நாங்கள் கோரிக்கை வைக்கவில்லை. திமுக ஆட்சியில் எப்போதும் இஸ்லாமியா்களுக்கு பங்கு அளிக்கப்பட்டு வருகிறது. திமுக-காங்கிரஸ் இடையே கருத்துப் பரிமாற்றமே தவிர, கூட்டணியில் எவ்வித விரிசலும் கிடையாது என்றாா் அவா்.

பிறக்கும்போதே குழந்தைகளுக்கு ஏற்படும் பரம்பரை நோய்! என்ன காரணம்?

தவறாக வெளியான காலமானார் செய்தி! நோபல் பரிசுக்கு வழிவகுத்ததா?

அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெறும்!

வரவேற்பைப் பெற்ற காதலர் நாள் மறுவெளியீட்டுத் திரைப்படங்கள்!

சுட்டும் விழி சுடரே தொடரில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்!

SCROLL FOR NEXT