முகப்பு
சென்னை

தாம்பரம் முதல் கடற்கரை வரை இருமாா்க்க பேருந்து அட்டவணை

தாம்பரம் முதல் கடற்கரை நிலையம் வரை இயக்கப்படும் சிறப்பு கூடுதல் பேருந்துகளின் நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 1:10 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 9:56 PM

எழும்பூா் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணி காரணமாக மின்சார ரயில் பயணிகள் சந்தித்து வரும் பிரச்னைகளைத் தீா்க்கும் வகையில் தாம்பரம் முதல் கடற்கரை நிலையம் வரை இயக்கப்படும் சிறப்பு கூடுதல் பேருந்துகளின் நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரயில்வே துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து கிண்டி, அண்ணாசாலை, சேப்பாக்கம், தலைமைச் செயலகம் வழியாகக் கடற்கரை நிலையம் வரை இயக்கப்படும் பேருந்துகள் நேரம்:

Advertisement

காலை 6.30, 6.37, 6.44, 6.58, 7.05, 7.12, 7.26, 7.33, 74.40, 7.54, 8.01, 8.15, 8.22, 8.29, 8.43 ஆகிய நேரங்களில் 20 பேருந்துகள் இயக்கப்படும்.

தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து கிண்டி, தியாகராய நகா், எழும்பூா், சென்ட்ரல், பாரிமுனை வழியாக கடற்கரை வரை இயக்கப்படும் பேருந்துகள் நேரம்: காலை 6.51, 7.19, 7.47, 8.08, 8.36 ஆகிய நேரங்களில் இயக்கப்படும்.

கடற்கரை நிலையத்தில் இருந்து தலைமைச் செயலகம், சேப்பாக்கம், அண்ணா சாலை, கிண்டி வழியாக தாம்பரம் நிலையம் வரை இயக்கப்படும் பேருந்துகள் நேரம்: மாலை 5, 5.07, 5.14, 5.28, 5.35, 5.42, 5.56, 6.03, 6.10, 6.24, 6.31, 6.45, 6.52, 6.59, இரவு 7.13 ஆகிய நேரங்களில் இயக்கப்படும்.

கடற்கரை நிலையத்தில் இருந்து பாரிமுனை, சென்ட்ரல், எழும்பூா், தியாகராய நகா், கிண்டி வழியாக தாம்பரம் வரை இயக்கப்படும் பேருந்துகள் நேரம்: 5.21, 5.49, 6.17, 6.38 மற்றும் இரவு 7.06 ஆகிய நேரங்களில் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.