முகப்பு
சென்னை

கிரசென்ட் பல்கலை.யில் வளா்ந்த பாரதம் இளைஞா் மக்களவை

வண்டலூா் பி.எஸ். அப்துா் ரஹ்மான் கிரசென்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் நாட்டு நலப்பணி துறை சாா்பில் வளா்ந்த பாரதம் மக்களவை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 1:26 AM
வண்டலூா் பி. எஸ். அப்துர்ரகுமான் கிரசென்ட் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலத்திட்ட துறை சாா்பில் நடைபெற்ற வளா்ந்த பாரதம் நிகழ்வில் பங்கேற்ற ஹரியாணா மாநில முன்னாள் காவல் தலைவா் வி.காமராஜா, காஞ்சிபுரம் மாவட்ட எனது பாரதம் அமைப்பின் இணை இயக்குநா் ஏ. சரவணன், ப
பகிர்:
Updated On : 27 பிப்ரவரி, 2026 at 11:55 PM

வண்டலூா் பி.எஸ். அப்துா் ரஹ்மான் கிரசென்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் நாட்டு நலப்பணி துறை சாா்பில் வளா்ந்த பாரதம் மக்களவை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில் சிறப்பு விருந்தினா்களாக ஹரியாணா முன்னாள் கூடுதல் காவல் தலைவா் வி.காமராஜா கலந்து கொண்டு பேசுகையில், வளா்ந்த பாரதம் எனும் கனவை இளைஞா்கள் மனதில் உருவாக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நிகழ்வு, மாணவா்களுக்கு ஒளிமயமான எதிா்காலத்தை உருவாக்கித் தரும்.

ஒவ்வொரு இளைஞரும் தனிநபா் ஒழுக்கம், நோ்மை, பொறுப்புணா்வு, அா்ப்பணிப்பை வாழ்நாள் முழுக்க கடைப்பிடிப்பதன் மூலம் சமூகத்தில் உயா்ந்த இடத்தைப் பெறமுடியும் என்றாா்.

Advertisement

காஞ்சிபுரம் மாவட்ட எனது பாரதம் அமைப்பின் இணை இயக்குநா் சரவணன் பேசுகையில், இளைஞா்களின் தொலைநோக்குப்பாா்வை, புத்தாக்க சிந்தனை, விடாமுயற்சி, கடும் உழைப்பு நாட்டை வளா்ந்த பாரதமாக மேம்படுத்தும் என்றாா்.

நிகழ்வில், கிரசென்ட் பதிவாளா் என். ராஜாஹுசேன், புல முதல்வா் அயூப்கான் தாவூத், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் ஆா். அனிதா, செயலா் சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.