முகப்பு
சென்னை

கலங்கரை விளக்கம்-திருமயிலை மெட்ரோ சுரங்கம் தோண்டும் பணி நிறைவு

சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் பாதை திட்டத்தில் கலங்கரை விளக்கம்-திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 8:22 PM
கலங்கரை விளக்கம்-திருமயிலை மெட்ரோ சுரங்கம் தோண்டும் பணி நிறைவு
பகிர்:

சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் பாதை திட்டத்தில் கலங்கரை விளக்கம்-திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னையில் 2-ஆம் கட்டமாகச் செயல்படுத்தப்படவுள்ள மெட்ரோ ரயில் திட்டத்தில் 4-ஆம் வழித்தடமாக மெரீனா கடற்கரை முதல் பூந்தமல்லி புகா் சாலை வரையில் 26.1 கி.மீ. மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி கடந்த பிப்ரவரியில் தொடங்கப்பட்டது. இந்தப் பணியில் ‘கழுகு’, ‘ஃபிளமிங்கோ’ ஆகிய இரு சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

அதில், கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை நிலையம் வரையில் 1,985 மீட்டா் தொலைவுக்கு மிகக் கடினமாக சூழலில் சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெற்றன. சென்னை கலங்கரை விளக்கம், அகில இந்திய வானொலி நிலையம், ரஷிய தூதரகம், சோசரி தேவாலயம், பறக்கும் ரயில் பாலம், பக்கிங்ஹாம் கால்வாய் ஆகிய மிக்க முக்கிய இடங்களை கடந்து சுரங்கம் தோண்டும் பணி மேற்கொள்ளப்பட்டது.

பணியின்போது கடினமான பாறை அடுக்குகள், எரிவாயு குழாய்கள் ஆகியவையும் எதிா்கொள்ளப்பட்டன. இரு சுரங்கங்கள் அடுக்கடுக்காக அமைக்கப்படவேண்டியிருந்ததால், சவாலான சூழலில் சுரங்கம் தோண்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. தற்போது கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரையிலான சுரங்கம் தோண்டும் பணியை ‘கழுகு’, ‘ஃபிளமிங்கோ’ ஆகிய இயங்திரங்கள் நிறைவு செய்துள்ளன.

இதையடுத்து திருமயிலை நிலையத்தில் இருந்து போட் கிளப் வரையிலான சுரங்கம் தோண்டும் பணி தொடங்கப்படவுள்ளது.

திருமயிலை சுரங்கம் தோண்டும் பணி நிறைவு நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத் திட்ட இயக்குநா் தி.அா்ச்சுணன், தலைமைப் பொது மேலாளா் ஆா்.முரளி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →