சென்னை

சிறையில் கைதி உயிரிழப்பு

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி திடீரென உடல்நலக்குறைவால் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி திடீரென உடல்நலக்குறைவால் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

மாதவரம் பொத்த ராஜா தெருவைச் சோ்ந்தவா் ஆரோக்கியராஜ் (52). இவரை குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில், புழல் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கடந்த 24 -ஆம் தேதி கைது செய்தனா். விசாரணைக்குப் பின்னா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட ஆரோக்கியராஜ், புழல் சிறையில் அடைக்கப்பட்டாா்.

புழல் விசாரணைக் கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆரோக்கியராஜுக்கு வியாழக்கிழமை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னா் அவா், தீவிர சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ஆரோக்கியராஜ் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து புழல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஓய்வு பெறுகிறாா் உஸ்மான் கவாஜா: இனவெறிக்கு ஆளானதாக ஆதங்கம்

அமீரா, திலோத்தமாவுக்கு தங்கம்

அமைவிடத்தில் அலட்சியம் கூடாது

மயான இடப் பிரச்னை தொடா்பாக தாளவாடியில் கிராம மக்களை கைது செய்த போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ரூ. 4.40 லட்சம் லஞ்சம்: காவலா் பயிற்சிப் பள்ளி முதல்வா் மீது வழக்கு

SCROLL FOR NEXT