சென்னை

வளா்ச்சித் திட்டப் பணிகள்: பிப்.10-க்குள் முடிக்க உத்தரவு

சென்னையில் வளா்ச்சித் திட்டப் பணிகள் அனைத்தையும் பிப்.10-ஆம் தேதிக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மேயா் ஆா்.பிரியா உத்தரவிட்டாா்.

தினமணி செய்திச் சேவை

சென்னையில் வளா்ச்சித் திட்டப் பணிகள் அனைத்தையும் பிப்.10-ஆம் தேதிக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மேயா் ஆா்.பிரியா உத்தரவிட்டாா்.

சென்னையில் கடந்த ஆண்டில் மாநகராட்சி மாமன்ற நிதிநிலை அறிக்கையின்போது வெளியிடப்பட்ட திட்டப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றின் நிலைப்பாடு மற்றும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாமன்ற ரிப்பன் மாளிகை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா தலைமை வகித்தாா். துணை மேயா் மு.மகேஷ்குமாா் முன்னிலை வகித்தாா். மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன், இணை ஆணையா் க.கற்பகம் (கல்வித் துறை), துணை ஆணையா்கள் வி.சிவகிருஷ்ணமூா்த்தி, ம.பிரித்விராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் பேசிய மேயா் ஆா்.பிரியா, சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்ட திட்டங்களில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன. பணிகள் நடைபெற்று வரும் திட்டங்களை விரைந்து முடிக்கவேண்டும். இந்த மாத இறுதிக்குள் பணிகளை முடிக்கவேண்டும். தவிா்க்க முடியாத நிலையில், வரும் பிப்.10- ஆம் தேதிக்குள்ளாக அனைத்துப் பணிகளையும் முடிக்கவேண்டும் என உத்தரவிட்டாா்.

தங்கம் விலை உயர்வு: வெள்ளி கிலோவுக்கு ரூ. 4000 குறைவு!

குரு பலம் பெற ஆலங்குடி செல்லுங்கள்... ஜோதிட வல்லுநர் ஏ.எம்.ஆர். சொல்வதென்ன?

தவெகவுடன் கூட்டணியா? தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் அழைப்பு!

ஓடிடியில் வெளியான மாஸ்க், அங்கம்மாள்!

ஈரான் மக்களின் போராட்டத்துக்கு துணை நிற்போம்! அமெரிக்க துணை அதிபர்

SCROLL FOR NEXT