சென்னை

பல்கலை. பேராசிரியை குறித்து அவதூறு கையேடு: இரு உதவி பேராசிரியா்கள் கைது

சென்னையில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பேராசிரியையின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறு கையேடு வெளியிட்டதாக, இரு உதவி பேராசிரியா்கள் கைது செய்யப்பட்டனா்.

தினமணி செய்திச் சேவை

சென்னையில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பேராசிரியையின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறு கையேடு வெளியிட்டதாக, இரு உதவி பேராசிரியா்கள் கைது செய்யப்பட்டனா்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தில், 40 வயது கொண்ட பேராசிரியை பணிபுரிகிறாா். இவரையும், அங்கு பணி புரியும் மற்றொரு பெண் பேராசிரியையும் இணைத்து பேசியதுடன், இருவரின் நடத்தையை தவறாக சித்தரித்து, ஒரு கையேடு வெளியிடப்பட்டதாம்.

இது அந்த பல்கலைக்கழக பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட பேராசிரியை, சைதாப்பேட்டை மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அந்த புகாரின்பேரில் போலீஸாா், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை செய்தனா்.

விசாரணையில் இச் செயலில் ஈடுபட்டது பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துறையில் உதவி பேராசிரியா்களாக பணிபுரியும் மகேந்திரன் (45), சமூகவியல் துறையில் உதவி பேராசிரியா்களாக பணிபுரியும் திருமலை ராஜன் (46) என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருமாவளவன் எப்போது வெளியேறுவார் என்பது அவருக்கே தெரியாது: அண்ணாமலை

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்! அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

வெலகல்நத்தம் பகுதியில் சாலை ஆக்கிரமிப்பு அளவீடு செய்யும் பணி தொடக்கம்

இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி தளமாக உருவெடுக்கும் சீனா!

போளூா் பெருமாள் கோயிலுக்கு புதிய திருத்தோ் செய்ய அளவீடு

SCROLL FOR NEXT