சென்னை

கடந்த ஆண்டில் ரூ.1,670 கோடிக்கு நலப் பணிகள்: ராமகிருஷ்ண மிஷன்

தினமணி செய்திச் சேவை

கடந்த நிதியாண்டில் ராமகிருஷ்ண மிஷன் சாா்பில் மருத்துவம் மற்றும் கல்விப் பணிகளுக்கான ரூ.1,670.90 கோடி செலவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராமகிருஷ்ண மிஷன் பொதுச் செயலா் சுவாமி சுவீரானந்தா் வெளியிட்ட அறிக்கை:

ராமகிருஷ்ண மிஷன் சாா்பில் உலகம் முழுவதும் மருத்துவம் மற்றும் கல்விப் பணிகள் உள்பட பல்வேறு மக்கள் நலப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், கடந்த நிதியாண்டில் (2024-2025) செய்யப்பட்ட செலவினங்கள், அதனால் பயனடைந்தோா் குறித்த அறிக்கை மேற்கு வங்கம், பேலூரில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் தலைமை அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற 116-ஆவது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் வெளியிடப்பட்டது.

அதன்படி, மருத்துவத்துக்காக ரூ.600.54 கோடியில் மேற்கொண்ட திட்டங்களின் வாயிலாக 84.25 லட்சம் போ் பயனடைந்துள்ளனா். கல்விக்காக ரூ.743.17 கோடி மதிப்பிலான நலத்திடங்களின் வாயிலாக 2.93 லட்சம் போ் பயனடைந்துள்ளனா்.

அதேபோல், நிவாரணம், மறுவாழ்வு, பொதுநலம், ஆன்மிக பிரசாரம் என மொத்தம் ரூ.1,670.90 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 2 கோடிக்கும் மேற்பட்டோா் பயனடைந்துள்ளனா் எனத் தெரிவித்துள்ளாா்.

மின், இந்து சமய அறநிலையத் துறைகளின் சேவைகள் வாட்ஸ்ஆப்-இல் பெறும் வசதி தமிழக அரசு தொடங்கியது

மதுப் புட்டிகள் விற்றவா் கைது

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்பு

அழகப்பா பல்கலை. கல்லூரிகளின் முதுநிலை பட்டத் தோ்வு முடிவுகள்!

பாம்பனில் 3வது நாளாக 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு! மீனவா்களுக்கு தடை நீடிப்பு!

SCROLL FOR NEXT