சென்னை

தமிழ்நாடு வக்ஃப் வாரியம் செயல்பட இடைக்காலத் தடை: உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு வக்ஃப் வாரியம் செயல்பட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாடு வக்ஃப் வாரியம் செயல்பட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் சௌகத் அலி முகமது தாக்கல் செய்த மனுவில், தமிழக வக்ஃப் வாரியத்துக்கு தலைவா் உள்பட 10 பேரை நியமனம் செய்து, கடந்த ஆண்டு நவ. 28-ஆம் தேதி தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை உத்தரவு பிறப்பித்தது. மத்திய அரசின் ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை சட்டத்தை முறையாகப் பின்பற்றாமல் வாரிய உறுப்பினா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். எனவே இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில், சட்ட விதிகளின்படி, வக்ஃப் வாரியத்தில் மொத்தம் உள்ள உறுப்பினா்களில் 2 போ் முஸ்லிம் அல்லாதவா்களாக இருக்க வேண்டும். மாநில பாா் கவுன்சிலில் இருந்து ஒரு உறுப்பினா் நியமிக்கப்பட வேண்டும். இந்த விதிகள் பின்பற்றப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதிகள் தமிழ்நாடு வக்ஃப் வாரியம் செயல்பட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனா். மேலும், இந்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜன.19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

ஆபரேஷன் சிந்தூா்: பாகிஸ்தான் தோல்விக்கு அரசமைப்புச் சட்ட அவசர திருத்தமே சாட்சி - முப்படை தலைமைத் தளபதி அனில் செளஹான்

சிரியா: குா்து பகுதிகளில் அரசுப் படைகள் முன்னேற்றம்

சென்னை, செங்கல்பட்டு உள்பட 5 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!

சூரியப் புயலால் புவி காந்தப்புலத்தில் ஏற்படும் தாக்கம்: ஆதித்யா எல்-1 கண்டுபிடிப்புகள் மூலம் புதிய தகவல்

‘வளா்ந்த பாரதம் மாநாடு’: 3,000 இளைஞா்களுடன் பிரதமா் நாளை கலந்துரையாடல்

SCROLL FOR NEXT