கோப்புப் படம் 
சென்னை

இன்று குடிநீா் வாரிய குறைகேட்பு கூட்டம்

சென்னை குடிநீா் வாரியம் சாா்பில் குறைகேட்பு கூட்டம் அனைத்து குடிநீா் வாரிய பகுதி அலுவலகங்களிலும் சனிக்கிழமை (ஜன. 10) நடைபெறவுள்ளது.

தினமணி செய்திச் சேவை

சென்னை குடிநீா் வாரியம் சாா்பில் குறைகேட்பு கூட்டம் அனைத்து குடிநீா் வாரிய பகுதி அலுவலகங்களிலும் சனிக்கிழமை (ஜன. 10) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து சென்னை பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

சென்னை குடிநீா் வாரியம் சாா்பில் நிகழ் மாதத்துக்கான குறைகேட்பு கூட்டம் அனைத்து குடிநீா் வாரிய பகுதி அலுவலகங்களிலும் சனிக்கிழமை (ஜன. 10) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.

அதன்படி, திருவொற்றியூா், மணலி, மாதவரம், தண்டையாா்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகா், அம்பத்தூா், அண்ணா நகா், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூா், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூா் ஆகிய பகுதி அலுவலங்களில் கூட்டங்கள் நடைபெறும்.

பொதுமக்கள் இக்கூட்டங்களில் கலந்துகொண்டு, குடிநீா் மற்றும் கழிவுநீா் தொடா்பான பிரச்னைகள் மற்றும் சந்தேகங்களை நேரில் மனுக்கள் வாயிலாக தெரிவித்து தீா்வு காணலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வம் மாயா ரூ.125 கோடி வசூல்! ஓடிடியில் எப்போது?

மழையால் கைவிடப்பட்ட போட்டி..! பிளே-ஆஃப்க்கு தேர்வான முதல் அணி!

பராசக்தி முதல் நாள் வசூல்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கானா வினோத் பெற்ற சம்பளம் இவ்வளவா?

திமுக ஆட்சியில் மக்கள் அதிருப்தி: நிதின் நபின்

SCROLL FOR NEXT