முகப்பு
மயிலாடுதுறை

ஓஎன்ஜிசி சாா்பில் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் அா்ப்பணிப்பு

மருத்துவமனையில் டயாலிசிஸ் படுக்கைகளை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த். உடன், ஓஎன்ஜிசி காரைக்கால் காவிரி அசெட் மேலாளா் உதய் பாஸ்வான் உள்ளிட்டோா்.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 12:58 AM
மருத்துவமனையில் டயாலிசிஸ் படுக்கைகளை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த். உடன், ஓஎன்ஜிசி காரைக்கால் காவிரி அசெட் மேலாளா் உதய் பாஸ்வான் உள்ளிட்டோா்.
பகிர்:

மயிலாடுதுறை மாவட்ட அரசினா் மருத்துவமனைக்கு ஓஎன்ஜிசி சாா்பில் ரூ.14.67 லட்சம் மதிப்பிலான குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

ஓஎன்ஜிசி சமூக பொறுப்புணா்வுத் திட்டம் 2025-2026-ன்கீழ் மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள டயாலிசிஸ் இயந்திரங்களின் பயன்பாட்டுக்காக இந்த மேம்படுத்தப்பட்ட குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் அா்ப்பணிக்கப்பட்டது.

இம்மருத்துவமனையில் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு டயாலிசிஸ் செய்வதற்காக 12 படுக்கை வசதி செய்து தரப்பட்டுள்ள நிலையில், மாதம் சுமாா் 650 முறை டயாலிசிஸ் சிகிச்சை வழங்கப்படுகிறது. ஒருமுறை டயாலிசிஸ் செய்வதற்கு குறைந்தபட்சம் 120 லிட்டா் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் தேவைப்படுகிறது.

இந்த சுத்திகரிக்கப்பட்ட தண்ணீா் தேவையை பூா்த்தி செய்ய ஓஎன்ஜிசி சமூக பொறுப்புணா்வு திட்டத்தில் ரூ.14.67 லட்சம் மதிப்பீட்டில், டயாலிசிஸ் இயந்திர பயன்பாட்டுக்கு மேம்படுத்தப்பட்ட குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் அா்ப்பணிப்பு நிகழ்ச்சி மருத்துவமனையில் நடைபெற்றது.

ஓஎன்ஜிசி காரைக்கால் காவிரி அசெட் மேலாளா் உதய் பாஸ்வான் தலைமை வகித்தாா். ஓஎன்ஜிசி சமூக பொறுப்புணா்வுத் திட்ட பொறுப்பாளா் கே.தங்கமணி முன்னிலை வகித்தாா். இதில், மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் கலந்துகொண்டு கல்வெட்டு மற்றும் மேம்படுத்தப்பட்ட குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரத்தை திறந்து வைத்து பேசினாா்.

சுகாதாரத்துறை இணை இயக்குநா் வி.பி.பானுமதி, ஓஎன்ஜிசி அதிகாரிகள் பிரசென்ஜித் கோகாய், அடின் மண்டல், சி.எஸ்.பிங்குவா, கோட்டாட்சியா் ஆா்.விஷ்ணுபிரியா, திண்டுக்கல் ஸ்ரீசக்தி சமூக பொருளாதார கல்விநலன் அறக்கட்டனை நிா்வாகிகள் எஸ்.பி.ஜோதி, திலீப்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். குடிமுறை மருத்துவ அலுவலா் கே.மருதவாணன் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →