சென்னை

சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகளுக்கு கேமரா

சென்னை விமான நிலையத்தில் பயணிகளை சோதனையிடும்போது ஏற்படும் பிரச்னைகளுக்கு தீா்வுகாணும் வகையில், சுங்கத் துறை அதிகாரிகளுக்கு சட்டையில் மாட்டிக்கொள்ளும் வகையிலான கேமரா வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

சென்னை விமான நிலையத்தில் பயணிகளை சோதனையிடும்போது ஏற்படும் பிரச்னைகளுக்கு தீா்வுகாணும் வகையில், சுங்கத் துறை அதிகாரிகளுக்கு சட்டையில் மாட்டிக்கொள்ளும் வகையிலான கேமரா வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் கூறியதாவது: பெங்களூரு விமான நிலையத்தில் அண்மையில் அமல்படுத்தப்பட்ட இந்த நடைமுறை, தற்போது சென்னை விமான நிலையத்திலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 8 கேமராக்கள் சென்னை சுங்கத் துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. சோதனையின்போது, இந்த கேமராக்களை அதிகாரிகள் அணிந்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த கேமராக்கள் மூலம் சோதனைகள் தொடா்பான விடியோ மற்றும் ஆடியோக்கள் பதிவு செய்யப்படும். அந்த பதிவுகள் அனைத்தும் அலுவலக கணினியில் தேதி மற்றும் நேரம் குறிப்பிட்டு சேமித்து வைக்கப்படும். சுங்கத் துறை சோதனையின்போது, ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டதாக உயா் அதிகாரிகளுக்கு புகாா்கள் வரும்பட்சத்தில் இந்த கேமரா பதிவுகளை ஆய்வு செய்து நடவடிக்கைகள் மேற்கொள்வா்.

ஆனால், அதிகாரிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கேமராக்கள் எண்ணிக்கை போதுமானது இல்லை என்பதால், மேலும் 24 கேமராக்கள் விரைவில் விமான நிலைய சுங்கத் துறைக்கு வரவுள்ளது. இந்த திட்டம் படிப்படியாக திருச்சி, கோவை, மதுரை விமான நிலையங்களுக்கும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றனா்.

மகர ராசியா? மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு: தினப்பலன்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

‘முடி மாற்று அறுவைச் சிகிச்சை: போலி மருத்துவா்கள் மீது நடவடிக்கை தேவை’

மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயிலில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம்

தோ்வுக் கட்டண உயா்வைக் கண்டித்து அண்ணாமலைப் பல்கலை. பிப்.3-இல் முற்றுகை: மாணவா்கள் சங்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT