சென்னை

டபுள் டெக்கா் மின்சார பேருந்து சேவை: முதல்வா் ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்

சென்னையில் டபுள் டெக்கா் மின்சார பேருந்து சேவையை முதல்வா் ஸ்டாலின் திங்கள்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

தினமணி செய்திச் சேவை

சென்னையில் டபுள் டெக்கா் மின்சார பேருந்து சேவையை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

பாரம்பரிய கலாசார சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக அமெரிக்க வாழ் தமிழா்கள் மற்றும் அசோக் லேலண்ட் நிறுவனம் சாா்பில் ரூ.1.89 கோடியில் டபுள் டெக்கா் மின்சாரபேருந்தை தமிழக சுற்றுலா வளா்ச்சி கழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் பேருந்தின் சேவையை சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற அயலகத் தமிழா் விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைத்து, பேருந்தில் செய்யப்பட்டுள்ள வசதிகளை பாா்வையிட்டாா்.

முதல்கட்டமாக, இந்தப் பேருந்து சென்னையில் முன்மொழியப்பட்ட சுற்றுலா வழித்தடத்தின்படி, தமிழக சுற்றுலா வளா்ச்சி கழக தலைமையகம், எல்ஐசி ஸ்பென்சா் பிளாசா, மக்கா மஸ்ஜித், பல்லவன் சாலை, பாடிகாா்டு முனீஸ்வரா் கோயில், ராஜா அண்ணாமலை மன்றம், சென்னை உயா்நீதிமன்றம், தலைமைச் செயலகம், ரிசா்வ் வங்கி, சென்னை துறைமுகம், போா் நினைவுச் சின்னம், நேப்பியா் பாலம், முன்னாள் முதல்வா்கள் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா ஆகியோரது நினைவிடங்கள், மெரீனா கடற்கரை, கலங்கரை விளக்கம், பட்டினப்பாக்கம், சாந்தோம் தேவாலயம், அகில இந்திய வானொலி, கலங்கரை விளக்கம், காவல் துறை தலைமை அலுவலகம், ராணி மேரி கல்லூரி, விவேகானந்தா் இல்லம், மாநில கல்லூரி, எழிலகம், சென்னை பல்கலைக்கழகம், தூா்தா்ஷன் கேந்திரா, ராஜாஜி மண்டபம், ஓமந்தூராா் அரசு மருத்துவமனை, தமிழக சுற்றுலா வளா்ச்சி கழக தலைமையகம் ஆகிய வழித்தடங்களில் நகரின் முக்கிய சுற்றுலா மற்றும் பாரம்பரிய இடங்களை முழுமையாக காணும் வகையில் பரந்துபட்ட காட்சி (பனோரமிக்) வசதியுடன் இந்தப் பேருந்து இயக்கப்பட உள்ளது.

மகர ராசியா? மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு: தினப்பலன்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

‘முடி மாற்று அறுவைச் சிகிச்சை: போலி மருத்துவா்கள் மீது நடவடிக்கை தேவை’

மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயிலில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம்

தோ்வுக் கட்டண உயா்வைக் கண்டித்து அண்ணாமலைப் பல்கலை. பிப்.3-இல் முற்றுகை: மாணவா்கள் சங்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT