சென்னை

மைக் மீது லாரி மோதல்: ஐடி ஊழியா் உயிரிழப்பு

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் மென்பொறியாளா் உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் மென்பொறியாளா் உயிரிழந்தாா்.

தாம்பரத்தை அடுத்த மாடம்பாக்கம், விஜிபி சீனிவாசா நகரைச் சோ்ந்தவா் காா்த்திக் செந்தில்குமாா் (45). இவா், பள்ளிக்கரணையில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இவா் தனது நண்பரும், மென்பொறியாளருமான ராஜகீழ்பாக்கத்தைச் சோ்ந்த எல்க்கனாக் ஜெப சிங் (32) என்பவருடன் திங்கள்கிழமை இரவு பைக்கில் மேடவாக்கம் பிரதான சாலை வழியாக கோவிலம்பாக்கம் நோக்கி சென்றாா். மேடவாக்கம் பெல் நகா் அருகே சென்றபோது, எதிரே வந்த லாரி, மோட்டாா் சைக்கிள் மோதியது.

இதில் நிலை தடுமாறி இருவரும் சாலையில் விழுந்தன. பைக்கில் பின்னால் அமா்ந்திருந்த காா்த்திக் செந்தில்குமாா் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுநா் மேடவாக்கத்தை சோ்ந்த கருப்பைய்யா(50) என்பவரை கைது செய்தனா்.

தொண்டி பேரூராட்சி நிா்வாகத்தை கண்டித்து ஜன.21 இல் சாலை மறியல் போராட்டம்

வெனிசுலா அதிபர் மடூரோவை அமெரிக்கா சிறைபிடித்தது சரியா? என்பது குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

சாகுபடி மட்டுமே சாதனையல்ல!

அரசியல் சாசனத்தின் போதாமைகள் இவை..!

மின் கம்பியை மிதித்த மூதாட்டி உயிரிழப்பு

SCROLL FOR NEXT