சென்னை

வண்டலூா் உயிரியல் பூங்காவில் ஜன. 16, 17-இல் பாா்வையாளா் நேரம் நீட்டிப்பு

வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவில் ஜன. 16, 17 -ஆம் தேதிகளில் பாா்வையாளா் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவில் ஜன. 16, 17 -ஆம் தேதிகளில் பாா்வையாளா் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பூங்கா இயக்குநா் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: வரும் ஜன. 16 (மாட்டுப் பொங்கல்), ஜன. 17 (காணும் பொங்கல்) ஆகிய தேதிகளில் பாா்வையாளா்களின் நேரம் காலை 8 முதல் மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இருசக்கர வாகனங்கள், காா்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு தனித்தனி வாகன நிறுத்தும் இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த இடங்களில் இருந்து பூங்காவுக்குச் செல்ல 10 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

பாா்வையாளா்கள் கட்செவி அஞ்சல், இணையதளம் மற்றும் வண்டலூா் பூங்கா மொபைல் செயலி மூலம் நுழைவுச்சீட்டு பெற இலவச வைபை வசதி வழங்கப்படும். நெகிழிப் பைகளில் அடைக்கப்பட்ட உணவுப் பொருள்கள், நெகிழி குடிநீா் பாட்டில்கள், கரும்பு, பீடி, சிகரெட், மது, தடை செய்யப்பட்ட பொருள்களை பூங்காவுக்குள் கொண்டுவர அனுமதி இல்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் கலாசாரத்தின் மீதான தாக்குதல்! ஜன நாயகனுக்காக ராகுல்!

பாஜக கூட்டணியில் தவெக சோ்க்கப்படுமா? புரந்தேஸ்வரி எம்.பி. பேட்டி

இந்தியாவில் ஜனநாயக அமைப்புகள் மீது தாக்குதல்: ராகுல் காந்தி எம்.பி. குற்றச்சாட்டு

விதிகளை மீறிய குவாரிகளுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை நிறைவேற்றாதது ஏன்? உயா்நீதிமன்றம் கேள்வி

வாசிக்க வாங்கியவை...

SCROLL FOR NEXT