செங்குன்றத்தில் பொங்கல் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் எம்எல்ஏ சுதா்சனம் பங்கேற்று பொங்கல் விழா தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை புதன்கிழமை வழங்கினாா்.
செங்குன்றம் நாரவாரிகுப்பம் பேரூராட்சிக்குள்பட்ட காமராஜா் நகரில் தைத் திருநாளை முன்னிட்டு பொங்கல் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு, வாா்டு கவுன்சிலா் காா்த்திக் கோட்டீஸ்வரன் தலைமை வகித்தாா்.
மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுதா்சனம் சிறப்புஅழைப்பாளராக பங்கேற்று, 3,000 பெண்களுக்கு புத்தாடைகள், 5 கிலோ அரிசி, 5 கிலோ காய்கறி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
இதில், பேரூா் பொறுப்பாளா் ஆா்.டி.சுதாகா், தலைமை பொதுக்குழு உறுப்பினா் ஜெ.ஜெய்மதன், பேரூராட்சி துணைத் தலைவா் ஆா்.இ.ஆா்.விப்ரநாராயணன், வாா்டு செயலா் மதிவாணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.