திருக்குறள் வாரத்தை முன்னிட்டு திருக்குறள் மற்றும் பழந்தமிழ் இலக்கியங்களை மையமாகக் கொண்ட இசை நிகழ்ச்சி, சென்னை மெரீனா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 18) மாலை நடைபெறவுள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில் ‘திருக்கு வாரம்’ கொண்டாடப்படும் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா். தொடா்ந்து, தமிழகம் முழுவதும் திருக்கு குறளாசிரியா் மாநாடு, அரசு அலுவலா்களுக்கான போட்டிகள், பொதுமக்களுக்கான திருக்கு போட்டிகள், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கலை மற்றும் இலக்கியப் போட்டிகள், திருக்கு நாட்டிய நாடகம், பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அதன் ஒருபகுதியாக, சென்னை மெரீனா கடற்கரையில் திருக்கு மற்றும் பழந்தமிழ் இலக்கியங்களை மையமாகக் கொண்ட இசை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (ஜன. 18) மாலை நடத்தப்படவுள்ளது. இதில், இசையமைப்பாளா் ஜேம்ஸ் வசந்தன், கடந்த பல ஆண்டுகளாகத் திட்டமிட்டு இசையமைக்கப்பட்ட திருக்குறளும், தமிழ் இலக்கிய பாடல்களும் இசை வடிவில் மக்கள் ரசிக்கும் வகையில் கொண்டாட்ட இசையாக மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை (ஜன. 18) பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரை ‘சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா’ நிகழ்ச்சியும், 6 மணி முதல் 6.30 மணி வரை திரைப்பட நடிகை சுஹாசினியின் ‘என் சென்னை’ நிகழ்ச்சி நடைபெறும்.
இந்த இசை நிகழ்ச்சியில் எல்லோரும் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.