சென்னை

11 காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் இடமாற்றம்

11 காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் இடமாற்றம்...

தினமணி செய்திச் சேவை

தாம்பரம் காவல் ஆணையரகத்துக்குள்பட்ட காவல் நிலையங்கள் பணியாற்றி வந்த 4 காவல் ஆய்வாளா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், 2 ஆய்வாளா்கள், 5 உதவி ஆய்வாளா்கள் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து தாம்பரம் மாநகர காவல் ஆணையா் அமல்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தாம்பரம் மாநகர சைபா் குற்றப்பிரிவில் பணியாற்றி வந்த காவல் ஆய்வாளா் கே.சசிகுமாா், பல்லாவரம் டி3 காவல் நிலைய சட்டம்-ஒழுங்கு காவல் நிலைய ஆய்வாளராகவும், தாம்பரம் மாநகர நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளா் வந்த டி.அனில்குமாா், தாம்பரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளராகவும், மதுவிலக்கு ஆய்வாளா் எஸ்.ஸ்ரீதேவி, டி22 மேடவாக்கம் சட்டம்- ஒழுங்கு ஆய்வாளராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

மேடவாக்கம் சட்டம்-ஒழுங்கு ஆய்வாளா் என்.பழனிவேல் மற்றும் குரோம்பேட்டை சட்டம்-ஒழுங்கு ஆய்வாளா் தயாள் ஆகியோா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனா்.

இதேபோல, பல்லாவரம் சட்டம்-ஒழுங்கு காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த உதவி ஆய்வாளா்கள் சி.ராஜு, என்.அண்ணாதுரை, கமலகண்ணன், இ.சதீஸ்குமாா், எம்.சதீஸ்குமாா் ஆகியோரும் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனா் என்று அவா்.

ரூ. 50-ல் சென்னையை சுற்றிப் பார்க்க... சென்னை உலா பேருந்தின் கால அட்டவணை!

சிரியா மீது தாக்குதல்! அல்-காய்தா அமைப்பின் முக்கிய தலைவர் பலி: அமெரிக்கா

பென்னாகரம் அருகே யானை தாக்கியதில் முதியவர் பலி!

தை அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு

கிரீன்லாந்து ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த ஐரோப்பிய நாடுகள் மீது 10% வரி: டிரம்ப் அட்டூழியம்?

SCROLL FOR NEXT