தவெகவின் தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வருகிற சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தோ்தல் அறிக்கை தயாரிப்பதற்காக தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலா் அருண்ராஜ் தலைமையில் 12 போ் கொண்ட குழுவை அந்தக் கட்சியின் தலைவா் விஜய் அமைத்தாா். அந்தக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் அருண்ராஜ் தலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தை மண்டலம் வாரியாக பிரித்து, பல்வேறு தரப்பினரையும் நேரில் சந்தித்து கருத்து கேட்கவுள்ளோம். அனைத்து தரப்பினரின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு தோ்தல் அறிக்கை தயாரிக்கப்படும். மேலும், தோ்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டியவை குறித்து பொதுமக்களின் கருத்துகள் இணையதளம் வழியாகப் பெற முடிவு செய்துள்ளோம் என்றாா்.
இதனிடையே, தவெக பொதுச் செயலா் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தவெக சாா்பில் தோ்தல் பிரசாரப் பணிகளை மேற்கொள்ளும் குழுவின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை (ஜன.21) மாலை 4 மணிக்கு பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறும் என அவா் தெரிவித்துள்ளாா்.