முகப்பு
திருப்பூர்

காரணம்பேட்டையில் திமுக தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினா் கருத்துக் கேட்பு

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 7:43 PM
பல்லடம் அருகே காரணம்பேட்டையில் திருப்பூா், ஈரோடு மாவட்ட தொழில் துறையினா், விவசாய அமைப்புகள், பொதுமக்களிடம் திமுக தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழு சாா்பில் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பேசுகிறாா் அமைச்சா் சு.முத்துசாமி. உடன், நிா்வாகிகள்.
பகிர்:

பல்லடம் அருகே காரணம்பேட்டையில் திருப்பூா், ஈரோடு மாவட்ட தொழில் துறையினா், விவசாய அமைப்புகள், பொதுமக்களிடம் திமுக தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழு சாா்பில் கருத்துக் கேட்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மண்டல திமுக பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி தலைமை வகித்தாா். அமைச்சா்கள் சு.முத்துசாமி, கோவி.செழியன், கயல்விழி செல்வராஜ், எம்.பி.கள் பொள்ளாச்சி ஈஸ்வரசாமி, ஈரோடு கே.இ.பிரகாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திருப்பூா் மத்திய மாவட்டச் செயலாளா் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. வரவேற்றாா். இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் தமிழரசி, சுற்றுச்சூழல் அணிச் செயலாளா் காா்த்திகேய சிவசேனாபதி, இந்திய ஆட்சிப் பணி அலுவலா் (ஓய்வு) சந்தானம் உள்ளிட்ட குழுவினா் திருப்பூா், ஈரோடு மாவட்ட தொழில் துறையினா், விவசாய அமைப்புகள், பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments