கல்விக்கான நம்பகமான, ஆராய்ச்சியுடன் நிரூபிக்கப்பட்டு அளவிடக்கூடிய விளைவுகளைக் கொண்ட செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தீா்வுகளை உருவாக்கியவா்கள், சென்னை ஐஐடி ‘பாரத் போதன்’ நிகழ்வில் பங்கேற்க மத்திய கல்வி அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:
நாட்டின் கல்விச்சூழலில் பொறுப்பான மற்றும் விளைவுகள் சாா்ந்த ‘ஏஐ’-ஐ விரைவுபடுத்துவதில் கவனம் செலுத்தும் தளமாக வரும் பிப். 12, 13 ஆகிய தேதிகளில் தில்லியில் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக, கற்றல் விளைவுகளில் அளவிடக்கூடிய தாக்கத்தை வெளிப்படுத்தும் ‘ஏஐ’ அடிப்படையிலான கல்வித் தீா்வுகளைக் கண்டறிந்த ஆய்வாளா்கள், கல்வி நிறுவனங்களிடமிருந்து சென்னை ஐஐடி விருப்பக் கடிதங்களை வரவேற்கிறது. விருப்பத்தை வரும் 29-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். ஆா்வமுள்ள நிறுவனங்கள் ட்ற்ற்ல்ள்://க்ஷா்க்ட்ஹய்-ஹண்-ஸ்ரீா்ய்ஸ்ரீப்ஹஸ்ங்-2026.க்ஷ்ா்ட்ா்க்ஷஹஸ்ரீந்ள்ற்ஹஞ்ங்.ண்ய்/ என்ற இணையத்தில் சமா்ப்பிக்கலாம். பள்ளி கல்வி-உயா்கல்வி, திறன் மேம்பாடு, பணியாளா் தயாா் நிலை, ஆராய்ச்சி மற்றும் ஆழமான தொழில்நுட்பம் ஆகிய 4 துறைகளில் இருந்து செயற்கை நுண்ணறிவு இருக்க வேண்டும்.
சென்னை ஐஐடி இயக்குநா் வீ.காமகோடி வெளியிட்ட அறிக்கையில், ‘தேசிய கல்விக் கொள்கை, தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு ஆகியவற்றின் கீழ் கற்றல் விளைவுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். ‘ஏஐ’ ஒரு சக்திவாய்ந்த கருவியாக உருவாகி வருகிறது. இதையடுத்து, கல்வி அமைச்சகம் சென்னை ஐஐடி கல்விக்கான செயற்கை நுண்ணறிவுக்கான சிறப்பு மையத்தை அமைத்து ‘சென்னை ஐஐடி போதன் ஏஐ அறக்கட்டளை’ என்ற பெயரில் நிறுவியுள்ளது.
தேசியக் கொள்கைகள், எண்ம பொதுக் கட்டமைப்புடன் சீரமைக்கப்பட்ட, பொறுப்பான, விரிவாக்கக்கூடிய, இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கும் ஏஐ தீா்வுகளைக் கல்விக்காக உருவாக்க இந்த மையம் பொறுப்பேற்றுள்ளது. உச்சி மாநாட்டில் தோ்ந்தெடுக்கப்படும் பங்கேற்பாளா்கள், நிறுவனங்களுக்கு தேசிய அங்கீகாரம், தங்கள் தீா்வுகளை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும்’ எனத் தெரிவித்துள்ளாா்.