சென்னை

செயற்கை இதய வால்வுக்குள் புதிய வால்வை மாற்றிப் பொருத்திய மருத்துவா்கள்

தினமணி செய்திச் சேவை

முதியவருக்கு இருமுறை மாற்றப்பட்ட இதய வால்வுக்குள் மீண்டும் செயற்கை வால்வை மாற்றி பொருத்தி ஆழ்வாா்ப்பேட்டை காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் சிகிச்சையளித்துள்ளனா்.

இதுதொடா்பாக மருத்துவமனையின் செயல் இயக்குநா் டாக்டா் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது: ‘அயாா்டிக் ஸ்டெனோசிஸ்’ எனும் இதய வால்வு சுருக்கப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட 78 வயதான முதியவருக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு திறந்தநிலை அறுவை சிகிச்சை மூலம் செயற்கை வால்வு பொருத்தப்பட்டது. நாளடைவில் அது பழுதடைந்ததால், 2019-இல் ரத்த நாளங்கள் வழியாகவே பழைய வால்வுக்குள் மற்றொரு புதிய வால்வு பொருத்தப்பட்டது.

சில ஆண்டுகளுக்குப் பிறகு, அவருக்கு மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. பரிசோதனையில், முன்பு பொருத்தப்பட்ட வால்வில் ரத்த உறைவு ஏற்பட்டிருப்பதும், அந்த வால்வு முழுமையாக விரியாததால் ரத்த ஓட்டம் தடைபடுவதும் கண்டறியப்பட்டது. நோயாளியின் வயதைக் கருத்தில் கொண்டு திறந்தநிலை அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படவில்லை.

மாறாக ஏற்கெனவே பொருத்தப்பட்டிருந்த இரண்டு வால்வுகளுக்குள் மூன்றாவதாக ஒரு புதிய வால்வைப் பொருத்தும் செயல்முறையை மருத்துவ நிபுணா்கள் ராஜாராம் அனந்தராமன், சுந்தா் ஆகியோா் தலைமையிலான குழுவினா் வெற்றிகரமாக மேற்கொண்டனா். இதன் பயனாக அந்த முதியவா் நலம் பெற்றுள்ளாா் என்றாா் அவா்.

சமூக ஊடக பிரபலமாகப் பெற்றோா் எதிா்ப்பு: வீட்டைவிட்டு சிறுவன் வெளியேறிய பெங்களூரில் மீட்பு

புதிய ஊரக வேலைச் சட்டத்துக்கு எதிராக ஏழைகள் ஒன்று திரள வேண்டும் - ராகுல் காந்தி வலியுறுத்தல்

புதிய ஓய்வூதிய திட்டத்தால் 23 ஆண்டு கால பிரச்னைக்கு தீா்வு - முதல்வா் மு.க.ஸ்டாலின்

சி. வி. சண்முகம் எம்.பி.க்கு எதிரான வழக்கு ரத்து

மும்பை மேயா் பதவி: பொதுப் பிரிவு பெண்ணுக்கு ஒதுக்கீடு

SCROLL FOR NEXT