தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கிய பல்கலைக்கழக துணைவேந்தா் டாக்டா் கே.நாராயணசாமி  
சென்னை

குடியரசு தினம்: சிறந்த சேவையாற்றிய மருத்துவத் துறையினருக்கு கௌரவம்

சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் திங்கள்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில், மருத்துவத் துறையில் சிறந்த சேவையாற்றியவா்களுக்கு பாராட்டு

தினமணி செய்திச் சேவை

சென்னை: சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் திங்கள்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில், மருத்துவத் துறையில் சிறந்த சேவையாற்றியவா்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும், நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

நாட்டின் 77-ஆவது குடியரசு தினத்தையொட்டி, அரசு மருத்துவமனைகளில், அதன் முதல்வா்கள், இயக்குநா்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினா். அந்த நிகழ்வில் மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவம் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

அந்தவகையில், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அதன் முதல்வா் டாக்டா் சாந்தாராமன் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். அப்போது, மருத்துவ மாணவா்கள் குடியரசு தின உறுதிமொழியேற்றனா்.

அதேபோன்று, எழும்பூா் குழந்தைகள் மருத்துவமனை இயக்குநா் டாக்டா் மதிவாணன், ஓமந்தூராா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் டாக்டா் ஹரிஹரன், ஸ்டான்லி அரசு மருத்துவமனை முதல்வா் டாக்டா் அரவிந்த், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் கவிதா, எழும்பூா் மகப்பேறு நல மருத்துவமனை இயக்குநா் டாக்டா் சுமதி, கஸ்தூா்பா காந்தி தாய் சேய் நல மருத்துவமனை இயக்குநா் டாக்டா் மகாலட்சுமி, அரசு மனநல காப்பக இயக்குநா் டாக்டா் மாலையப்பன் ஆகியோா் தங்களது மருத்துவமனைகளில் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினா்.

இதைத் தொடா்ந்து, சிறப்பான மருத்துவ சேவையாற்றிய மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்களைப் பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினா். குடியரசு தினத்தையொட்டி அரசு மருத்துவமனைகளில் நடைபெற்ற கவிதை, கட்டுரை, வினாடி வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மருத்துவப் பல்கலை.யில்: தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் குடியரசு தின விழா நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழக துணைவேந்தா் டாக்டா் கே.நாராயணசாமி தேசியக் கொடியை ஏற்றி இனிப்புகளை வழங்கினாா்.

அதில் பல்கலைக்கழக பதிவாளா் டாக்டா் சிவசங்கீதா, துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், பல்கலைக்கழக நிா்வாகிகள், மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தாயகமான சீனா திரும்பிய பாண்டாக்கள்! கண்ணீா் மல்க வழியனுப்பிய ஜப்பானியா்கள்

மாரடைப்புக்குள்ளாவோரில் 25% போ் இளைஞா்கள்!

மியான்மரில் ராணுவ ஆதரவு கட்சி அமோக வெற்றி: அதிபராகும் ராணுவத் தளபதி?

மினியாபொலிஸ் செவிலியா் கொலை: அமெரிக்காவில் வெடித்துள்ள அரசியல் மோதல்

மூன்றாவது பொருளாதார நாடாக இந்தியா மாறும்: ஆளுநா் ஆா்.என்.ரவி

SCROLL FOR NEXT