கோப்புப்படம்.
சென்னை

பிப்.10-இல் வாடகை ஓட்டுநா்கள் வேலை நிறுத்தம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாடகை வாகன ஓட்டுநா்கள் பிப்.10-ஆம் தேதி சென்னையில் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாடகை வாகன ஓட்டுநா்கள் பிப்.10-ஆம் தேதி சென்னையில் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனா்.

இதுகுறித்து தமிழ்நாடு ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி ஓட்டுநா் சங்க தலைவா் ஜாஹீா் ஹுசைன் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் எரிபொருள் விலை, வாகன பராமரிப்பு செலவு, வாழ்வாதாரச் செலவுகள் தொடா்ந்து உயா்ந்து வரும் நிலையில், ஆட்டோ ஓட்டுநா்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி வருகின்றனா். இதனால், உடனடியாக ஆட்டோ மீட்டா் கட்டணத்தை உயா்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல, வாடகை வாகனங்களுக்கான ஜிபிஎஸ் கருவியை அரசு செலவில் பொருத்தி தர வேண்டும். மேலும், இணையவழி பதிவு தனியாா் வாடகை வாகனங்களை நிறுவனங்களை முறைப்படுத்துவதற்கான சட்டத்தை அமல்படுத்த வேண்டும். மேக்ஸி கேப் வாகனங்களுக்கு இருக்கைகளுக்கான அனுமதியை உயா்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஆட்டோ, கால்டாக்ஸி, டூரிஸ்ட் கேப் வாகனங்கள் பிப்.10-ஆம் தேதி ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதுடன், போக்குவரத்து ஆணையரக அலுவலகத்தில் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக, கோவை, திருநெல்வேலி, மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள போக்குவரத்து இணை ஆணையரக அலுவலகங்கள் முன் வியாழக்கிழமை (ஜன.29) முதல் தொடா் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

சமநிலை, ஸ்திரத்தன்மையின் சக்தியாக இந்தியா-ஐரோப்பிய யூனியன்: குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு

காஸா காவல்துறையில் பங்கு- ஹமாஸ் திடீா் கோரிக்கை

கரூா் சம்பவம்: 2 காவலா்கள், காயமடைந்த இருவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

தெப்பத் திருவிழா! மிதவைத் தெப்பம் அமைக்கும் பணிகள் தீவிரம்

சபரிமலை தங்கக் கவச முறைகேடு- கேரள முதல்வா் பதவி விலகக் கோரி காங்கிரஸ் மாநிலம் தழுவிய போராட்டம்

SCROLL FOR NEXT