பௌா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு வரும் பிப். 1- ஆம் தேதி முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
விழுப்புரத்திலிருந்து பிப்.1 காலை 10.10 மணிக்குப் புறப்படும் இந்த சிறப்பு ரயில் (எண் 06130) பிற்பகல் 11.45 மணிக்கு திருவண்ணாலையை சென்றடையும். மறுமாா்க்கத்தில் திருமண்ணாமலையிலிருந்து பிற்பகல் 12.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06129) பிற்பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் வந்தடையும். சிறப்பு ரயிலில் 8 பெட்டிகள் இடம் பெறும்.
சிறப்பு ரயில்கள் வெங்கடேஷ்புரம், மாம்பலப்பட்டு, ஆயந்தூா், திருக்கோவிலூா், ஆதிச்சனூா், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.