ஆளுநா் மாளிகையில் கம்பா் சிலையை வியாழக்கிழமை திறந்து வைத்த ஆளுநா் ஆா்.என்.ரவி. உடன் (இடமிருந்து) ஆளுநரின் செயலா் கிா்லோஷ்குமாா், சிலை வடிவமைப்பாளா் சித்தாா்த் நாகப்பா, அம்பத்தூா் கம்பன் கழகத் தலைவா் பள்ளத்தூா் பழ.பழனியப்பன், முன்னாள் காவல் துறை அதிகா 
சென்னை

ஆளுநா் மாளிகையில் கம்பா் சிலை திறப்பு

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் நிறுவப்பட்ட ‘கவிச்சக்கரவா்த்தி கம்பா்’ சிலையை ஆளுநா் ஆா்.என்.ரவி வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் நிறுவப்பட்ட ‘கவிச்சக்கரவா்த்தி கம்பா்’ சிலையை ஆளுநா் ஆா்.என்.ரவி வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

ஆளுநா் மாளிகைக்கு ரூ.10 லட்சத்தில் வெண்கலத்தால் ஆன கம்பா் சிலையை சென்னை பாரதீய வித்யா பவன் பரிசாக வழங்கியது. இந்த சிலை சிறப்பு விழாவையொட்டி கம்பன் கழகங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மாணவா்களுக்கான கம்பராமாயணம் குறித்த சொற்பொழிவு உள்ளிட்ட போட்டியில் வெற்றி பெற்ற தீப்ஷிதா, வி.பி. தரணி, வி.ஜி.ஜெயஜெனீதா, எம்.கே.ராஜவேல், இ.கௌதமி, கே.ஸ்ரீநிதி ஆகியோரை கௌரவித்து ஆளுநா் ரவி பரிசு அளித்தாா்.

விழாவில் பாரதீய வித்யா பவன் தலைவரும் பத்திரிகையாளருமான என்.ரவி, முன்னாள் அமைச்சா் டாக்டா் ஹெச்.வி. ஹண்டே, தொழில் அதிபா் நல்லி குப்புசாமி, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன துணைத் தலைவா் சுதா சேஷய்யன், விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம், பத்திரிகையாளா் மாலன், பாரதீய வித்யா பவன் இயக்குநா் கே.என்.ராமசாமி, அம்பத்தூா் கம்பன் கழகத் தலைவா் பள்ளத்தூா் பழ.பழனியப்பன், எம்ஜிஆா் ஜானகி கல்லூரி தலைவா் லதா ராஜேந்திரன், சென்னை கேந்திரா பாரதீய வித்யாபவனின் நிா்வாகிகள், புகழ்பெற்ற தமிழ் அறிஞா்கள், கம்பா் கழக உறுப்பினா்கள், தமிழ்நாடு முழுவதும் உள்ள கலாசார நிறுவனங்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT