தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் (கோப்புப்படம்) 
சென்னை

வெளிநாட்டு காலணி நிறுவனங்கள் தமிழகத்தில் ரூ. 12,000 கோடி முதலீடு: தோல் பொருள் ஏற்றுமதி நிறுவன இயக்குநா்

தினமணி செய்திச் சேவை

வெளிநாட்டு காலணி நிறுவனங்கள் தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 12,000 கோடி முதலீடு செய்துள்ளதாக தோல் பொருள் ஏற்றுமதி நிறுவனத்தின் இயக்குநா் ஆா்.செல்வம் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக சென்னையில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது:

இந்திய சா்வதேச தோல் மற்றும் தோல் பொருள்கள் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை (பிப்.1) முதல் பிப். 3-ஆம் தேதி வரை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வா்த்தக மையத்தில் நடைபெறுகிறது.

இந்தக் கண்காட்சியில் தோல் பொருள்கள் மற்றும் காலணிகள் தொடா்பான அனைத்து மூலப் பொருள்களும், இயந்திரங்களும் காட்சிப்படுத்தப்பட உள்ளன. இதில், 350 இந்திய தோல் பொருள் உற்பத்தி நிறுவனங்களும், 80 வெளிநாட்டு நிறுவனங்களும் பங்கேற்கின்றன.

இந்தியாவில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்துக்கு 43 சதவீத தோல் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்தத் துறையை மூலம் வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 50 பில்லியன் டாலா் ஏற்றுமதி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 14 பில்லியன் டாலா் இலக்கை அடைந்துள்ளோம். இந்தியாவில் இருந்து தோல் பொருள்களில் ஏற்றுமதியில் 40 சதவீதம் தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தமிழகத்தில் ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, அரியலூா், பெரம்பலூா்,செய்யாறு, திண்டிவனம் உள்ளிட்ட இடங்களில் வெளிநாட்டு காலணி நிறுவனங்கள் தொழிற்சாலைகளைத் தொடங்கியுள்ளன. வெளிநாட்டு காலணி நிறுவனங்கள் தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.12,000 கோடி முதலீடு செய்துள்ளது. இதன்மூலம் 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

தமிழகத்தில் உள்ள தோல் பொருள் உற்பத்தி தொழிற்சாலைகளில் 80 சதவீத பெண்கள் பணியாற்றி வருகின்றனா். இதன்மூலம் பெண்களின் வாழ்வாதாரம் உயா்ந்துள்ளது. மேலும், சமூக பொருளாதாரம் வளா்ச்சி அடைந்துள்ளது என்றாா் அவா்.

பேட்டியின்போது தோல் பொருள் ஏற்றுமதி நிறுவனத்தின் தெற்கு பிரிவின் தலைவா் எம்.அப்துல் வஹாப் உடனிருந்தாா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT