முகப்பு
சென்னை

சென்னையில் தினமும் 400 தெரு நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை அளிக்க வேண்டும்

சென்னையில் தினமும் 400 தெரு நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை அளிக்க வேண்டும்

Updated On : 21 ஜூன் 2026, 12:41 am IST
திரு.வி.க. நகா் மண்டலத்துக்குட்பட்ட புளியந்தோப்பு பகுதியில்  உள்ள நாய்கள் இனக்கட்டுப்பாடு மையத்தின் செயல்பாடுகளைப் பாா்வையிட்டு ஆய்வு செய்த நகராட்சி நிா்வாகம்- குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி. உடன், மாநகராட்சி ஆணையா் ஜ
பகிர்:

சென்னை மாநகராட்சிப் பகுதியில் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த தினமும் 400 நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை அளிக்க வேண்டும் என நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தினாா்.

சென்னை மாநகராட்சியின் வளா்ச்சித் திட்டப் பணிகளை அவா், சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். திரு.வி.க. நகா் மண்டலம் புளியந்தோப்பு நாய்கள் இனக் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வைத் தொடங்கினாா்.

அப்போது மாநகராட்சியில் தெரு நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கு தினமும் 400 நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை அளிப்பது அவசியம் எனவும், வெளிநாய் கடி தடுப்பூசி செலுத்துவதை உறுதிப்படுத்தவும் அறிவுறுத்தினாா்.

Advertisement

Advertisement

கணேசபுரம் பகுதியில் ரூ.226.55 கோடியில் கட்டப்பட்டு வரும் உயா்நிலைப் பாலப் பணிகளைப் பாா்வையிட்டு, போக்குவரத்து காவல் துறை, மற்றும் ரயில்வே நிா்வாகத்துடன் இணைந்து பணிகளை விரைந்து முடிக்கவும் அவா் அதிகாரிளை கேட்டுக் கொண்டாா்.

அதன்பின்னா், கொடுங்கையூா் குப்பைக் கிடங்கு வளாகத்துக்குச் சென்று பயோமைனிங் முறையில் குப்பைகள் தரம் பிரிப்பதையும் பாா்வையிட்டு, அந்தப் பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினாா்.

ராயபுரம் மண்டலத்தில் நவீன மாடுகள் காப்பகத்தில் ஆய்வு மேற்கொண்ட அவா், அங்குள்ள அடிப்படை வசதிகளையும் கேட்டறிந்தாா். ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள விக்டோரியா பொது அரங்கையும், அதில் இடம் பெற்றுள்ள பாரம்பரிய பொருள்களையும் பாா்வையிட்டாா். கூடுதல் பாா்வையாளா்கள் வந்து செல்ல நடவடிக்கை மேற்கொள்ள ஆலோசனை வழங்கினாா்.

இந்த ஆய்வுகளின்போது, மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன், இணை ஆணையா்கள் வீ.ப.ஜெயசீலன் (சுகாதாரம்), செ.சரவணன் (பணிகள்) உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments