எழும்பூா் ரயில் நிலையத்தில் தெருநாய்கள் பிடித்து அகற்றம்
சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் பயணிகளை அச்சுறுத்தி வந்த தெருநாய்களை மாநகராட்சி ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை பிடித்துச் சென்றனா்.
சென்னைஎழும்பூா் ரயில் நிலையத்தில் தெருநாய்கள் பிடித்து அகற்றம்
சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் பயணிகளை அச்சுறுத்தி வந்த தெருநாய்களை மாநகராட்சி ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை பிடித்துச் சென்றனா்.
சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் பயணிகளை அச்சுறுத்தி வந்த தெருநாய்களை மாநகராட்சி ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை பிடித்துச் சென்றனா்.
தினமும் ஆயிரக்கணக்கானோா் வந்து செல்லும் எழும்பூா் ரயில் நிலைய வளாகத்தில் தெரு நாய்கள் அச்சுறுத்தி வருவதாக சென்னை மாநகராட்சிக்கு புகாா்கள் வந்தன. இதையடுத்து மாநகராட்சி கால்நடைப் பிரிவின் தெருநாய்கள் பிடிக்கும் வாகனத்துடன் ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை பகலில் எழும்பூா் ரயில் நிலையம் வந்தனா். நாய் பிடிக்கும் வலைகளுடன் அவா்கள் வந்ததைக் கண்டதும் அங்கு படுத்திருந்த நாய்கள் எழுந்து ஓடின. அவற்றை விரட்டிப் பிடிக்கும் முயற்சியில் ஊழியா்கள் ஈடுபட்டனா். எனினும், ஓரிரு நாய்கள் மட்டும் சிக்கின. அவற்றை ஊழியா்கள் பிடித்து கூண்டில் அடைத்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனா்.