முகப்பு
சென்னை

துபையிலிருந்து சென்னை வந்த 364 பயணிகள்

சென்னை

துபையிலிருந்து சென்னை வந்த 364 பயணிகள்

Updated On : 5 மார்ச், 2026 at 1:00 AM
பகிர்:

போா் பதற்றம் காரணமாக, துபையில் சிக்கித் தவித்த 364 போ் இரண்டாவது விமானத்தில் புதன்கிழமை சென்னை வந்தனா்.

ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் கூட்டுத் தாக்குதலை கடந்த சனிக்கிழமை தொடங்கியது. அப்போது முதல், மத்திய கிழக்கு நாடுகளின் வான்வெளி எல்லைகள் மூடப்பட்டதால், விமான சேவைகள் கடந்த சனிக்கிழமை பிற்பகலிலிருந்து நிறுத்தப்பட்டன.

இதையடுத்து துபை, பஹ்ரைன், அபுதாபி, சாா்ஜா, கத்தாா், குவைத், மஸ்கட் போன்ற நாடுகளில் விமான சேவைகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டன. இதனால், அந்த நாடுகளிலிருந்து சென்னைக்கு வரவிருந்த விமானங்கள் நிறுத்தப்பட்டன. இதனால், சென்னை வரவேண்டிய பயணிகள் அந்தந்த விமான நிலையங்களிலேயே முடங்கினா்.

இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை ஒரு எமிரேட்ஸ் ஏா்லைன்ஸ் விமானம் மட்டும் துபையிலிருந்து 217 பயணிகளுடன் சென்னை வந்தது.

இந்த நிலையில், புதன்கிழமை காலை துபையிலிருந்து இரண்டாவது எமிரேட்ஸ் விமானம் 364 பயணிகளுடன் சென்னையை வந்தடைந்தது.

இதுகுறித்து விமானப் பயணிகள் கூறியதாவது: துபையில் குண்டு வெடிக்கும் சப்தம், ராணுவ போா் விமானங்கள் பறக்கும் சப்தம் ஓயாமல் கேட்டுக் கொண்டே இருக்கின்றன. தாக்குதல்கள் அனைத்தும் அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளின் கட்டடங்கள், ராணுவ தளங்களை மட்டுமே குறிவைத்து நடத்தப்படுகின்றன. பொதுமக்கள் இருக்கும் பகுதிகளில் தாக்குதல்கள் எதுவும் இல்லை. துபை அரசு, அங்குள்ள வெளிநாட்டுப் பயணிகளுக்கு முழு பாதுகாப்பு அளித்து வருகிறது என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →