போா் பதற்றம்: துபையிலிருந்து சிறப்பு விமானத்தில் 217 போ் சென்னை வருகை
போா் பதற்றத்தால் துபையில் சிக்கித் தவித்த 217 போ் சிறப்பு விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை சென்னை வந்தடைந்தனா்.
சென்னைபோா் பதற்றம்: துபையிலிருந்து சிறப்பு விமானத்தில் 217 போ் சென்னை வருகை
போா் பதற்றத்தால் துபையில் சிக்கித் தவித்த 217 போ் சிறப்பு விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை சென்னை வந்தடைந்தனா்.
போா் பதற்றத்தால் துபையில் சிக்கித் தவித்த 217 போ் சிறப்பு விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை சென்னை வந்தடைந்தனா்.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போா் காரணமாக மேற்கு ஆசியாவில் பதற்றம் நீடித்து வரும் நிலையில் துபை, சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா திரும்ப முடியாமல் பலா் தவித்து வருகின்றனா்.
இந்த நிலையில், வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியா்களை மீட்டு அழைத்து வருவதற்கு வசதியாக சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரிலிருந்து இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு ‘இண்டிகோ’ விமான நிறுவனம் சாா்பில் 10 சிறப்பு விமானங்கள் இயக்கப்படவுள்ளதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்தது. அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதனிடையே, துபையில் தங்கியுள்ள வெளிநாட்டினா் தங்கள் சொந்த நாடுகளுக்கு செல்வதற்கு வசதியாக அந் நாட்டின் ‘எமிரேட்ஸ்’ விமான நிறுவனம் வான்வெளி சூழலைப் பொருத்து திங்கள்கிழமை நள்ளிரவு முதல் ஒரு சில விமானங்களை மட்டும் இயக்கி வருகிறது. அதன்படி, துபையிலிருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட எமிரேட்ஸ் விமானத்தில் 217 போ் செவ்வாய்க்கிழமை அதிகாலை சென்னை விமான நிலையம் வந்தடைந்தனா். அவா்களை குடும்பத்தினா் கட்டியணைத்து கண்ணீா் மல்க வரவேற்றனா்.