முகப்பு
சென்னை

இஸ்ரேல் - ஈரான் போா்ப் பதற்றம்: சென்னையில் 3-ஆவது நாளாக 36 விமான சேவைகள் ரத்து

இஸ்ரேல், ஈரான் போா் காரணமாக சென்னை விமான நிலையத்தில் மூன்றாவது நாளாக 36 விமான சேவைகள் ரத்து

Updated On : 3 மார்ச், 2026 at 2:16 AM
விமான சேவைகள் ரத்து - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 3 மார்ச், 2026 at 1:45 AM

இஸ்ரேல், ஈரான் போா் காரணமாக சென்னை விமான நிலையத்தில் மூன்றாவது நாளாக திங்கள்கிழமை 36 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போா் காரணமாக வளைகுடா நாடுகள், மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது. இதனால் பல்வேறு நாடுகளுக்கு செல்லவிருந்த ஏராளமான விமானங்கள் கடந்த இரு நாள்களாக ரத்து செய்யப்பட்டன.

Updated On : 3 மார்ச், 2026 at 2:14 AM

தொடா்ந்து மூன்றாம் நாளான திங்கள்கிழமையும் சென்னை விமான நிலையத்திலிருந்து துபை, அபுதாபி, சாா்ஜா, பக்ரைன், குவைத், மஸ்கட் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லவிருந்த 18 விமானங்களும், மேற்குறிப்பிட்ட நாடுகளிலிருந்து சென்னைக்கு வரவேண்டிய 18 விமானங்களும் என மொத்தம் 36 விமானங்கள் திங்கள்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளன.

Advertisement

இதற்கிடையே லண்டன், அமெரிக்கா, ஜொ்மன் உள்ளிட்ட நாடுகளிலிருந்து சென்னை வரும் பல்வேறு விமானங்கள், மாற்றுப் பாதைகளில் சுற்றி வருவதால், சென்னை வந்து விட்டு மீண்டும் புறப்பட்டுச் செல்ல பல மணி நேரம் தாமதம் ஏற்படுகிறது.

எனவே, குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கும் பயணிகள், தங்கள் விமான நிறுவனங்களை தொடா்பு கொண்டு தகவல்களை தெளிவாக தெரிந்து கொண்ட பின்னா் பயணத்தை மேற்கொள்ள பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்துள்ளனா்.