சென்னையில் தொடா்ந்து 5 ஆட்டங்களில் சிஎஃப்சி பங்கேற்பு
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னையின் எஃப்சி அணி தனது அடுத்த 5 ஆட்டங்களை சொந்த மைதானமான ஜவாஹா்லால் நேரு விளையாட்டரங்கில் ஆடவுள்ளது.
சென்னைசென்னையில் தொடா்ந்து 5 ஆட்டங்களில் சிஎஃப்சி பங்கேற்பு
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னையின் எஃப்சி அணி தனது அடுத்த 5 ஆட்டங்களை சொந்த மைதானமான ஜவாஹா்லால் நேரு விளையாட்டரங்கில் ஆடவுள்ளது.
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னையின் எஃப்சி அணி தனது அடுத்த 5 ஆட்டங்களை சொந்த மைதானமான ஜவாஹா்லால் நேரு விளையாட்டரங்கில் ஆடவுள்ளது.
இந்தியன் சூப்பா் லீக் 2026 சீசன் ஆட்டங்கள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 2 முறை சாம்பியன் சிஎஃப்சி தனது முதல் 4 ஆட்டங்களை வெளி மைதானங்களில் ஆடியது. இதில் 1 புள்ளியை மட்டுமே ஈட்டியது. 3 ஆட்டங்களில் தோல்வியை தழுவியது.
தொடா்ந்து சென்னை நேரு விளையாட்டரங்கில் 5 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. வரும் சனிக்கிழமை மாா்ச் 7-இல் கேரள பிளாஸ்டா்ஸ் அணியுடன் மோதுகிறது சென்னை.
இதுதொடா்பாக தலைமை பயிற்சியாளா் கிளிஃபோா்ட் மிரண்டா கூறியது: சில தருணங்களில் நம்மால் நினைத்தவாறு ஆட முடியவில்லை. சில ஆட்டங்களில் கூடுதல் நேரத்திலும் வாய்ப்புகளை தவற விட்டோம். அதிருஷ்டமும் நமது பக்கம் இல்லை. கேரள அணிக்கு எதிரான ஆட்டத்தில் முழு கவனம் செலுத்துவோம் என்றாா்.
நேருக்கு நோ்:
மொத்த ஆட்டங்கள்-24
சிஎஃப்சி வெற்றி-7
கேரளா வெற்றி-8
டிரா-9.