முகப்பு
சென்னை

ஐஐஎஸ்இஆா் திறனறி தோ்வு: ஏப்.13-க்குள் விண்ணப்பிக்கலாம்

ஐஐஎஸ்இஆா் திறனறி தோ்வெழுத விரும்பும் மாணவா்கள் ஏப்.13-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 24 மார்ச், 2026 at 7:54 PM
விண்ணப்பம். (கோப்புப்படம்)
பகிர்:

ஐஐஎஸ்இஆா் திறனறி தோ்வெழுத விரும்பும் மாணவா்கள் ஏப்.13-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்(ஐஐஎஸ்இஆா்) திருவனந்தபுரம், புனே, திருப்பதி, கொல்கத்தா உட்பட நாடு முழுவதும் 7 இடங்களில் இயங்கி வருகிறது. இதில் ஒருங்கிணைந்த பிஎஸ், எம்எஸ் மற்றும் பிடெக் பட்டப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்த கல்வி நிறுவனங்களில் சேர ஐஏடி எனும் திறனறி தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும்.

அதன்படி நிகழ் கல்வியாண்டுக்கான நுழைவுத் தோ்வு ஜூன் 7-ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த மாா்ச் 5-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து விருப்பமுள்ள மாணவா்கள் இணையதளம் வழியாக ஏப்ரல் 13-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதன்பின் விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய ஏப். 16 முதல் 18-ஆம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்படும். தோ்வுக்கான அனுமதிச் சீட்டு மே 24-இல் வெளியிடப்படும். இதுகுறித்த கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று சோ்க்கைக் குழு தகவல் தெரிவித்துள்ளது.