‘உள்ளூா் விடுமுறை தோ்தலுக்கு பொருந்தாது’
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஏப். 1-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டாலும் வேட்புமனு தாக்கல் செய்யலாம்
திருநெல்வேலி: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஏப். 1-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டாலும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.
தமிழகத்தில் ஏப். 23 ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் மாா்ச் 30ஆம் தேதி தொடங்குகிறது. இதனிடையே, ஏப். 1 ஆம் தேதி பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அப்படி, உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டாலும் வேட்பு மனு தாக்கல் வழக்கம்போல் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளாா்.