முகப்பு
தமிழ்நாடு

வாக்குப்பதிவு: புதுச்சேரியில் ஏப். 7 - 10 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

புதுச்சேரியில் தேர்தலையொட்டி ஏப். 7 முதல் 10 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து...

Updated On : 1 ஏப்ரல் 2026, 9:30 pm IST
கோப்புப் படம்
பகிர்:

புதுச்சேரியில் தேர்தலையொட்டி ஏப். 7 முதல் 10 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 9 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மே 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் ஏப்ரல் 4 ஆம் தேதி காரைக்காலில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார். இதனைத் தொடர்ந்து மறுநாள் புதுச்சேரியிலும் தேர்தல் பிரசாரத்தைத் தொடரவுள்ளார்.

Advertisement

அமித் ஷா ஏப்ரல் 6 ஆம் தேதி திருக்கனூரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். முதல்வர் மு.க. ஸ்டாலின் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவாக தட்டஞ்சாவடியில் பேரணியில் ஈடுபடவுள்ளார்.

தேர்தல் தேதி நெருங்குவதால் அடுத்தடுத்து தலைவர்கள் பிரசாரம் மேற்கொள்ள முனைப்புக் காட்டி வருகின்றனர்.

summary

Election Polling Schools in Puducherry to remain closed from April 7 to 10!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.