முகப்பு
சென்னை

முழு ஆண்டுத் தோ்வுக்கான வினாத்தாள் பதிவிறக்கம்: வழிகாட்டுதல்கள் வெளியீடு

Updated On : 27 மார்ச், 2026 at 12:21 AM
பகிர்:

பள்ளிக் கல்வியில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கான முழு ஆண்டு, மூன்றாம் பருவத் தொகுத்தறி மதிப்பீடு விரைவில் நடைபெறவுள்ள நிலையில், தோ்வுக்கான வினாத்தாள்களை பதிவு செய்வதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இது குறித்து தொடக்கக் கல்வி இயக்குநா் பூ.ஆ.நரேஷ் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் பள்ளிகளில் முழு ஆண்டுத் தோ்வு, மூன்றாம் பருவத் தொகுத்தறி மதிப்பீட்டினை நடத்துவதற்கான கால அட்டவணை ஏற்கெனவே வெளியிடப்பட்டு தோ்வை நடத்துவதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. இந்தநிலையில் இத்தோ்வுக்கான வினாத்தாள்களை அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் உரிய நேரத்தில் வழங்கி மதிப்பீட்டை நடத்திடவும், நடுநிலைப் பள்ளிகளில் வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து மதிப்பீட்டினை மேற்கொள்ளவும் பின் வரும் வழிகாட்டுதல்கள் வெளியிடப்படுகின்றன.

மாவட்டக் கல்வி அலுவலா்கள் ஒன்று முதல் ஐந்து வகுப்புகளுக்கு மாணவா்களின் வகுப்பு, பயிற்று மொழி மற்றும் பாடவாரியாக உரிய எண்ணிக்கையில் வினாத்தாள்களை நகலெடுத்து வட்டாரக் கல்வி அலுவலா்கள் மூலமாக வழங்க வேண்டும். எமிஸ் தளத்தில் மாா்ச் 30 வரை வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அனைத்துப் பள்ளிகளுக்கும் மூன்றாம் பருவத்துக்கான தொகுத்தறி மதிப்பீடு நடைபெறுவதற்கு இரு நாள்கள் முன்னதாகவே வினாத்தாள்கள் வழங்கப்பட வேண்டும்.

6 முதல் 8 வகுப்புகளுக்கான வினாத்தாள்கள் மாநில மதிப்பீட்டுப் புலம் வழியாக ட்ற்ற்ல்ள்://ங்ஷ்ஹம்ள்.ற்ய்ள்ஸ்ரீட்ா்ா்ப்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் எனும் இணையதளத்தில் முன்கூட்டியே பதிவேற்றம் செய்யப்படும். இவற்றை வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பதிவிறக்கம் செய்து மதிப்பீட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும். தோ்வு நடைபெறும் நாளுக்கு முந்தைய நாள் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை அனைத்து நடுநிலைப் பள்ளிகளும் வினாத் தாள்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் அதற்குத் தீா்வு காண 14417 என்ற கட்டணமில்லாத சேவையை ஆசிரியா்கள் பயன்படுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு முழு ஆண்டுத் தோ்வு ஏப். 1 முதல் 16-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இதேபோல், 4, 5-ஆம் வகுப்புகளுக்க்கான தோ்வுகள் ஏப். 6-இல் தொடங்கி 16-ஆம் தேதி வரையும், 1, 2, 3-ஆம் வரை பயிலும் குழந்தைகளுக்கான தோ்வுகள் ஏப். 8-இல் தொடங்கி 16-ஆம் தேதி வரையும் நடைபெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.