2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!!
2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில், வெற்றியாளர்கள் முழு விவரம் வெளியானது.
உலகளவில், திரைப்படத் துறையினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் இந்திய நேரப்படி திங்கள்கிழமை அதிகாலை கோலாகலமாக நடைபெற்றது.
அமெரிக்காவின் அகாதெமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அன்ட் சயின்ஸ் என்ற அமைப்பின் மூலம் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் ஆஸ்கர் விருதுகள் பட்டியலில், இந்த ஆண்டு, சிறந்த படங்களுக்கான விருதுகள் ஒன் பேட்டில் ஆப்டர் அனதர் (One Battle After Another), ஃபிராங்கன்ஸ்டைன் (Frankenstein) ஆகிய திரைப்படங்களுக்கு கிடைத்துள்ளன.
இந்திய நேரடிப்படி, திங்கள்கிழமை காலை 4.30 மணியளவில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில், 98-வது அகாதெமி விருதுகள் வழங்கும் விழா, நடைபெற்றது.
இந்த விழாவில், உலகளவில் பரிந்துரைக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்ட சிறந்த படங்கள் மற்றும் திரைப்பட கலைஞர்கள், நடிகர், நடிகைகளுக்கு துறைவாரியாக ஆஸ்கர் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
2026-ஆண்டின் ஆஸ்கர் விருது வெற்றியாளர்கள் முழு விவரங்கள் வெளியாகியுள்ளன.
1. சிறந்த திரைப்படம் (Best Picture): ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர் (One Battle After Another)
2. சிறந்த இயக்குநர் (Best Director): பால் தாமஸ் ஆண்டர்சன் (Paul Thomas Anderson) – One Battle After Another
3. சிறந்த நடிகர் (Best Actor): மைக்கேல் பி. ஜோர்டான் (Michael B. Jordan) – Sinners
4. சிறந்த நடிகை (Best Actress): ஜெஸ்ஸி பக்லி (Jessie Buckley) – Hamnet
5. சிறந்த துணை நடிகர் (Best Supporting Actor): சீன் பென் (Sean Penn) – One Battle After Another
6. சிறந்த துணை நடிகை (Best Supporting Actress): அமி மடிகன் (Amy Madigan) – Weapons
7. சிறந்த அசல் திரைக்கதை (Best Original Screenplay): ரையன் கூக்ளர் (Ryan Coogler) – Sinners (ரையன் கூக்ளர் பெறும் முதல் ஆஸ்கர் விருது)
8. சிறந்த தழுவல் திரைக்கதை (Best Adapted Screenplay): பால் தாமஸ் ஆண்டர்சன் – One Battle After Another
9. சிறந்த காஸ்டிங் (Best Casting - முதல் முறையாக அறிமுகம்): கசாண்ட்ரா குலுகுண்டிஸ் (Cassandra Kulukundis) – One Battle After Another
மேலும் சில முக்கிய விருதுகள்
1. சிறந்த சர்வதேசத் திரைப்படம்: Sentimental Value (நார்வே)
2. சிறந்த அனிமேஷன் திரைப்படம்: KPop Demon Hunters
3. சிறந்த ஒளிப்பதிவு: ஆட்டம் டூரால்ட் அர்க்காபாவ் (Autumn Durald Arkapaw) – Sinners (ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருதை முதல்முறையாக ஒரு பெண் பெற்றுள்ளார்)