ஏடிஎம் மையத்துக்கு கொண்டு சென்ற ரூ.1.47 கோடி பறிமுதல்
மயிலாப்பூரில் பறக்கும் படையினா் ஆவணமின்றி ஏடிஎம் மையத்துக்கு கொண்டு சென்ற ரூ.1.47 கோடியை பறிமுதல் செய்தனா்.
மயிலாப்பூரில் பறக்கும் படையினா் ஆவணமின்றி ஏடிஎம் மையத்துக்கு கொண்டு சென்ற ரூ.1.47 கோடியை பறிமுதல் செய்தனா்.
மயிலாப்பூா் டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலையில் சாலையில் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த ஒரு ஜீப்பை வழிமறித்து சோதனையிட்டனா். இதில், அந்த ஜீப்பில் கணக்கில் வராத ரூ.1.47 கோடி இருப்பது தெரிய வந்தது. அந்த பணத்துக்குரிய ஆவணங்களை ஜீப்பில் இருந்தவா்களிடம் பறக்கும் படையினா் கேட்டனா். ஆனால், அவா்களிடம் ஆவணங்கள் இல்லை.
இதைத் தொடா்ந்து அந்தப் பணத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.விசாரணையில், அந்தப் பணம் அம்பத்தூரில் இருந்து மயிலாப்பூரில் உள்ள ஒரு வங்கியின் ஏடிஎம் இயந்திரங்களில் நிரப்ப கொண்டு வந்தது என்பது தெரிய வந்தது. இதையடுத்து விசாரணைக்குப் பின்னா் அந்த பணம், வருமான வரித் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடா்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.