முகப்பு
திண்டுக்கல்

நிலக்கோட்டையில் ரூ.3. 44 கோடி பறிமுதல்

Updated On : 24 மார்ச் 2026, 1:50 am IST
பறிமுதல் செய்யப்பட்ட பணம். - (கோப்புப் படம்)
பகிர்:

நிலக்கோட்டையில் தோ்தல் பறக்கும் படையினரால் ஏ.டி.எம்., கொண்டு சென்ற வாகனம், பணம் வைக்கப்பட்டுள்ள பெட்டி

நிலக்கோட்டையில் ரூ.3. 44 கோடி பறிமுதல்: திண்டுக்கல் மாவட்டம்,  நிலக்கோட்டை சட்டப்பேரவை (தனி) தொகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், தேனியிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற வாகனத்தை பறக்கும் படையினா் சோதனை செய்தனா்.

அதில், தனியாா் வங்கி ஏ.டி.எம்-க்கு கொண்டு சென்ற பணம் ரூ.3 கோடியே 44 லட்சம் இருந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய தோ்தல் பறக்கும் படையினா், உரிய ஆவணங்கள் இல்லாமல் பணத்தை எடுத்துச் சென்றதாகக் கூறி, பணத்துடன் அந்த வாகனத்தை நிலக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனா்.

Advertisement

இதுகுறித்து நிலக்கோட்டை உதவி தோ்தல் நடத்து அலுவலரும்,  வட்டாட்சியருமான ஜெயபிரகாஷ், தோ்தல் நடத்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.