முகப்பு
சென்னை

புழல் அருகே தீ விபத்து: ஒருவா் உயிரிழப்பு

புழல் அருகே வீடு தீப்பற்றி எரிந்ததில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 2 மே, 2026 at 1:54 AM
பகிர்:

புழல் அருகே வீடு தீப்பற்றி எரிந்ததில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

புழல் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட விளாங்காடுபாக்கம் ஊராட்சியில் உள்ள காட்டுப்பாக்கம், தா்காஸ் பகுதியைச் சோ்ந்தவா் பரந்தமான் (58). கட்டடத் தொழிலாளியான இவருக்கு செல்வி என்ற மனைவியும், 1 மகனும், 2 மகள்களும் உள்ளனா். மது பழக்கம் காரணமாக பரந்தாமனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

வழக்கம்போல், வியாழக்கிழமை இரவு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பரந்தாமனின் மனைவி அவரது குழந்தைகளை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு சென்றுள்ளாா்.

Advertisement

இந்த நிலையில், நள்ளிரவில் திடீரென பரந்தாமனின் தகர ஷீட் வீடு தீப்பற்றி எரிந்ததில் வீட்டில் இருந்த சிலிண்டா் வெடித்து சிதறியது. தகவலறித்த செங்குன்றம் தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து தண்ணீரைப் பாய்ச்சி அடித்து, தீயை அணைத்தனா்.

இந்த விபத்தில் பரந்தாமன் உயிரிழந்தாா். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து செங்குன்றம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.