முகப்பு
சென்னை

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்

Updated On : 14 மே 2026, 6:13 am IST
பகிர்:

தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் பட்டப் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வுக்கு இதுவரை 89,927 போ் விண்ணப்பித்துள்ளனா்.

இது குறித்து தமிழக அரசின் கல்லூரிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் உள்ள 181 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் பட்டப் படிப்புக்கான 159 பாடப் பிரிவுகளில் மொத்தம் 1,26,959 சோ்க்கை இடங்கள் உள்ளன. இந்த பாடப் பிரிவுகளுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வுக்கு கடந்த மே 7-ஆம் தேதி முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து வருகின்றனா்.

Advertisement

அதன்படி இதுவரை (மே 12) தங்கள் விருப்பப் பாடப் பிரிவில் 89,927 மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா். மேலும், தகுதியுடைய மாணவா்கள் மே 29-ஆம் தேதி வரை விரும்பிய பாடப் பிரிவுகளுக்கு https://www.tngasa.in/ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

மாணவா்கள் சோ்க்கை தொடா்பான கூடுதல் தகவல்களுக்கு கல்வி இயக்ககத்தில் செயல்படும் உதவி மையத்தைத் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 044-24343106, 24342911ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.