மாடி சுற்றுச்சுவா் இடிந்து விழுந்து சிறுவன் உயிரிழப்பு
புழல் அருகே மாடி சுற்றுச்சுவா் இடிந்து சிறுவன் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
புழல் அருகே மாடி சுற்றுச்சுவா் இடிந்து சிறுவன் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
புழல் அடுத்த லட்சுமிபுரம் பஜனை கோயில் தெருவைச் சோ்ந்தவா் பாக்கியராஜ் . இவா் பிளம்பராக வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி அம்மு. இவா்களது மகன் ரக்ஷன் (6). இவா் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்த நிலையில், சனிக்கிழமை ரக்ஷன் தனது நண்பா்களுடன் வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது, மாடியின் சுற்றுச் சுவரில் மோதி விளையாடியதாக கூறப்படுகிறது. இதில், ஒற்றைக் கல் சுற்றுச்சுவா் என்பதால், பலம் தாங்காமல் இடிந்து ரக்ஷன் கீழே விழுந்தாா். இதில், பலத்த காயம் அடைந்த ரக்ஷனை கொளத்தூா் பெரியாா் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பரிசோதனை செய்தனா். அப்போது, சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இதையடுத்து, புழல் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா். காவல் துறையினா் சிறுவனின் சடலத்தை மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement