சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை!
சென்னையில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருவது குறித்து...
சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
எஸ்பிஐ வங்கியில் ரூ. 300 கோடி கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் ஃபைனான்சியர் குல்னஸ் பேகம் வீடு உள்பட பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், அண்ணா நகரில் லஷ்மணசாமி என்பவரது வீடு, அவரது மைத்துனர் கிருஷ்ணமூர்த்தி வீடு உள்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது.
Advertisement
Advertisement
வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்தல், சட்டவிரோத பணபரிவர்த்தனை உள்ளிட்ட புகார்கள் அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது
அமலாக்கத் துறையினரின் சோதனை முடிவில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் தொடர்பான தகவல்கள் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Enforcement Directorate officials are conducting raids at 10 locations in Chennai.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.