முகப்பு
தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை!

தமிழகம் முழுவதும் ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருவது குறித்து...

Updated On : 3 ஜூலை 2026, 6:48 pm IST
லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை! - கோப்புப்படம்
பகிர்:

தமிழகம் முழுவதும் 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

லஞ்ச புகாரின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்களில் லஞ்சம் மற்றும் ஊழல் கண்காணிப்பு பிரிவினர் 40 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

நுங்கம்பாக்கம் உள்ளிட்ட மண்டல அலுவலகங்களிலும் நெல்லை, ஈரோடு, ராமநாதபுரம் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்று வருகின்றன.

Advertisement

Advertisement

மேலும் புதுக்கோட்டை மாநகராட்சி அலுவலகம், ஒசூர் மாநகராட்சி அலுவலகத்திலும் லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், பத்திரப்பதிவு அலுவலங்களைத் தொடர்ந்து மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகின்றன.

ஒரே நாளில் உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்புத் துறையினரின் சோதனையால் பரபரப்பு நிலவி வருகிறது. சோதனை முடிந்தவுடன் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

summary

Officials from the Directorate of Vigilance and Anti-Corruption are conducting raids at 40 locations across Tamil Nadu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments